You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாஜக தலைவர் எல். முருகன்: "மக்களிடத்தில் பாஜகவின் கொள்கைகளை கொண்டு செல்வோம்"
''மக்கள் தொகை கணக்கெடுப்பு பற்றிய விழிப்புணர்வு செய்தியை மக்களிடம் கொண்டு செல்லவோம். நேரடியாக அவர்களை சந்தித்துப் பேசி, அவர்களுக்கு தெளிவுபடுத்துவோம்,'' என தமிழக பாஜகவின் புதிய மாநில தலைவராக பொறுப்பேற்றுள்ள எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
பாஜகவின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள எல்.முருகன், சென்னையில் கட்சியின் மூத்த தலைவர்களிடம் வாழ்த்துக்களை பெற்றார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய முருகன், தமிழகத்தில் பாஜகவின் வாக்கு வங்கியை அதிகரிக்கப்போவதாக தெரிவித்தார்.
''அதிக அளவில் மாணவர்கள் ,இளைஞர்கள் கட்சியில் இணைந்துள்ளார்கள். இங்குள்ள மூத்த தலைவர்களின் வழிகாட்டுதலின்படி கட்சியை செயல்படுத்துவோம். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிதான் இப்போது தொடர்கிறது. அதேநேரம், வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் எங்கள் கட்சியின் உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் இடம்பெறுவார்கள். அதற்காக வாக்கு வங்கியை அதிகரிக்கும் பணிகளில் ஈடுபடுவோம். மக்களிடத்தில் பாஜகவின் கொள்கைகளை கொண்டு செல்வோம். தமிழக நலன், தமிழர்கள் நலனை எப்போதும் விட்டுக் கொடுக்க மாட்டோம்,'' என்றார்.
- கொரோனா வைரஸ்: ஹோமியோபதி சிகிச்சையால் குணப்படுத்த முடியுமா?
- மூன்று நாடுகளில் இருந்து இலங்கை வரும் பயணிகளுக்கு கொரோனா தொற்று ஆய்வு
- Pandemic என்றால் என்ன? ஏன் கொரோனா வைரஸை அப்படி சொல்கிறார்கள்?
- கொரோனா தொற்றிலிருந்து உங்களை காத்து கொள்வது எப்படி?
- கொரோனா தொற்று குறித்த முக்கிய சந்தேகங்களும், அதற்கான பதில்களும்
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கு தமிழகத்தில் நிலவும் எதிர்ப்பு குறித்து கேட்டபோது, மார்ச் 20ம் தேதி ஏப்ரல் 5ம் தேதி வரை கிராமங்களில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பற்றிய விழிப்புணர்வு செய்தியை கொண்டுசெல்ல வீடுவீடாக சென்று மக்களை சந்திக்கவுள்ளதாக தெரிவித்தார்.
''மக்கள் தொகை கணக்கெடுப்பு பற்றிய விழிப்புணர்வு செய்தியை மக்களிடம் கொண்டு செல்லவோம். நேரடியாக அவர்களை சந்தித்துப் பேசி, அவர்களுக்கு தெளிவுபடுத்துவோம்,'' என்றார் முருகன்.
முன்னதாக பாஜக தொண்டர்கள், மூத்த நிர்வாகிகள் சென்னை விமான நிலையத்தில் முருகனுக்கு பூங்கொத்து அளித்து வரவேற்றனர். அந்த சமயத்தில் பேசிய முருகன், தன்னை தலைவராக நியமித்த மோதி மற்றும் அமித்ஷாவுக்கும் நன்றி தெரிவித்தார்.
பிற செய்திகள்:
- இத்தாலியில் ஆயிரத்தை கடந்த கொரோனா உயிரிழப்புகள், ஆசிய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி
- கொரோனா வைரஸ்: - 'டெல்லியில் ஐபிஎல் போட்டிகள் நடக்காது' - இந்தியாவில் அண்மைய தகவல்கள் என்ன?
- ஜஸ்டின் ட்ரூடோ மனைவிக்கு கொரோனா, வெறிச்சோடும் நகரங்கள், ரத்தாகும் நிகழ்வுகள் - என்ன நடக்கிறது உலகில்?
- "ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த விவாதம், மீண்டும் துவங்கிய புள்ளிக்கே வந்திருக்கிறது"
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: