You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மத்திய பட்ஜெட் 2020: ‘பூமி திருத்தி உண்’ - நிர்மலா சீதாராமன் மேற்கோள் காட்டிய ஆத்திசூடியின் பொருள் என்ன?
நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்ரவரி 1) தாக்கல் செய்தார்.
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்துவரும் நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது உரையில் 'பூமி திருத்தி உண்' என்னும் அவ்வை ஆத்திச்சூடியின் வரிகளை மேற்கோள் காட்டினார்.
பூமி திருத்தி உண் - பொருள் என்ன?
நிலத்தைப் பண்படுத்தி, அதில் பயிர் செய்து, விளைந்த நெல்லைக் கொண்டு உண்ண வேண்டும். அடுத்தவர் வாழ்வை வாழாதே. நீயே உழைத்து வாழ். உன் சொந்த காலில் நில். கால் வயிற்றுக் கஞ்சியானாலும் நீயே உழைத்துக் குடி. அடுத்தவரிடம் கையேந்தாதே!
'பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்அணியென்ப நாட்டிவ் வைந்து' என்ற திருவள்ளுவரின் குறளை தனது உரையில் மேற்கோள் காட்டிய நிர்மலா சீதாராமன், நாட்டின் வளத்தை மேம்படுத்துவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
நோய் இல்லாமை, நல்ல பொருளாதார வளம், விளைச்சல், இன்பமான வாழ்வு, பாதுகாப்பான சூழல், என இந்த ஐந்து குணங்களும் ஒரு நாட்டிற்கு அழகாகும் என்பது அக்குறளின் பொருள் ஆகும்.
மேலும் காஷ்மீரி மொழியில் பட்ஜெட்டின் சில குறிப்புகளை வாசித்தார் நிர்மலா சீதாராமன்.
தனது உரையின் தொடக்கத்தில் "சலிமார் பூங்காவை போன்றது இந்தியா. தால் ஏரியில் உள்ள தாமரை மலரை போன்றது நம் நாடு, உலகத்திலேயே சிறந்த நாடு இது, " என்ற காஷ்மீர் கவிதையை இந்தியில் வாசித்தார் நிர்மலா சீதாராமன்.
பிற செய்திகள்:
- Budget 2020 Live: மத்திய நிதிநிலை பட்ஜெட் இன்று தாக்கல் - நேரலை தகவல்கள்
- நிர்பயா பாலியல் வல்லுறவு வழக்கு: குற்றவாளி வினய் சர்மாவின் கருணை மனு நிராகரிப்பு
- சார்ஸை விஞ்சிய கொரோனா - சீனா சென்றவர்களுக்கு அமெரிக்காவில் தடை - 10 தகவல்கள்
- இன்றிலிருந்து லட்சக்கணக்கான செல்ஃபோன்களில் வாட்ஸ்ஆப் இயங்காது - ஏன் தெரியுமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: