சிவகாசியில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு: அசாம் மாநில நபர் கைது

சிவகாசியில் 8 வயது சிறுமி பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் அசாம் மாநில நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே கொங்கலாபுரம் கிராமத்தை சேர்ந்த பட்டாசு தொழிலாளியின் மகள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த ஜனவரி 20ஆம் தேதி மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தவர், அருகில் உள்ள கழிப்பறைக்கு செல்வதாக கூறி சென்றார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

காணாமல் போன சிறுமி அடுத்த நாள் காலை வீட்டின் அருகே முட்புதரில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் மர்ம நபர்களால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்த போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி பல கட்ட போராட்டம் நடத்தப்பட்ட நிலையில் கொலையாளிகளை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள் உத்தரவின் பெயரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

வட மாநில வாலிபர்களுக்கு கொலையில் தொடர்பு இருக்கலாம் என கருதினர். அதன் பேரில் அந்த பகுதியில் தங்கி வேலை பார்க்கும் வட மாநில வாலிபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில் அசாம் மாநிலத்தை சேர்ந்த 6 பேரை பிடித்து மூன்று நாட்களாக ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்த நிலையில் அதில் ஒருவரான மஜம் அலியை கைது செய்து சிவகாசி நகர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: