ஜே.என்.யு. போராட்டத்தில் தீபிகா படுகோன்: பாதிக்கப்பட்ட மாணவர்களோடு நின்றார்

தீபிகா படுகோன்.

பட மூலாதாரம், Spice PR

படக்குறிப்பு, காயம் பட்ட ஒரு மாணவியுடன் தீபிகா படுகோன்.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நுழைந்து முகமூடி அணிந்த வன்முறை கும்பல் தாக்கியதில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் போராட்டத்தில் பங்கேற்றார் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன்.

இதையடுத்து அவரது அடுத்த படமான 'சபாக்' திரைப்படத்தை புறக்கணிக்கக் கோரி டிவிட்டரில் டிரெண்ட் செய்து வருகிறார்கள் வலதுசாரிகள்.

முகமூடி அணிந்த கும்பல் ஒன்று டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஞாயிற்றுக்கிழமை நுழைந்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை குறிவைத்து கடுமையாகத் தாக்கியது. இதில் ஜே.என்.யு. மாணவர் சங்கத் தலைவி ஒய்ஷி கோஷ் உள்ளிட்டவர்கள் பலத்த காயமடைந்தனர்.

காயம்பட்ட இடதுசாரி மாணவர்கள், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பாஜக ஆதரவு ஏ.பி.வி.பி. மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள் என்று குற்றம்சாட்டுகின்றனர். பதிலுக்கு ஏ.பி.வி.பி.யும் தாக்குதலுக்கு இடதுசாரி மாணவர்களை குற்றம்சாட்டுகிறது.இந்நிலையில் ஒய்ஷி கோஷ் உள்ளிட்டவர்கள் மீது பல்கலைக்கழக நிர்வாகம் அளித்த வேறொரு புகாரில் வழக்குப் பதிவு செய்துள்ளது போலீஸ்.

இந்த தாக்குதலைக் கண்டித்து மாணவர்கள் ஜே.என்.யு. பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை நடத்திய போராட்டத்தில் பங்கேற்றார் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன்.

அவர் பங்கேற்ற போராட்டத்தின் காணொளி:

Facebook பதிவை கடந்து செல்ல

தகவல் இல்லை

மேலதிக விவரங்களைக் காண Facebookவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது.

Facebook பதிவின் முடிவு

போராட்டத்தில் 'இன்குலாப் ஜிந்தாபாத்', 'ஜெய் பீம்' ஆகிய முழக்கங்களும், விடுதலைப் போராட்ட வீரர் பகத் சிங்கை புகழும் முழக்கங்களும் எழுப்பப்பட்டன.

இதையடுத்து, தீபிகா படுகோன் நடித்து வெளியாகும் சபாக் திரைப்படத்தை புறக்கணிக்க வலியுறுத்தி வலதுசாரி ஆதரவாளர்கள் டிவிட்டரில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: