ஃபோர்ப்ஸ் இந்திய பிரபலங்களின் பட்டியலில் அஜித்தை முந்திய விஜய்

ஃபோர்ப்ஸ்

ஃபோர்ப்ஸ் நிறுவனம் 2019ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த 100 பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், தமிழ் திரைப்படத்துறையை சேர்ந்த நடிகர் ரஜினிகாந்த் 13வது இடத்தை பிடித்துள்ளார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் 16வது இடத்தையும், நடிகர் விஜய் 47வது இடத்தையும், நடிகர் அஜித் 52வது இடத்தையும், இயக்குநர் ஷங்கர் 55வது இடத்தையும், நடிகர் கமல் ஹாசன் 56வது இடத்தையும், நடிகர் தனுஷ் 64வது இடத்தையும், நடிகை டாப்சி பன்னு 68வது இடத்தையும், இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் 84வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

நடிகர் விஜய் கடந்தாண்டு இதே பட்டியலில் 26வது இடத்தில் இருந்தார்.

ஃபோர்ப்ஸ்

பட மூலாதாரம், forbesindia

கேரள திரைப்படத்துறைய சேர்ந்தவர்களும் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். அதில், நடிகர் மோகன்லால் 27வது இடத்தையும், நடிகர் மம்மூட்டி 62வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

நடிகர் பிரபாஸ் 44வது இடத்தையும், நடிகர் மகேஷ் பாபு 54வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

எதன் அடிப்படையில் இந்த பட்டியல் எடுக்கப்பட்டது?

இந்தியாவின் 100 பிரபலங்களின் பட்டியல் எந்த அடிப்படையில் தயாரிக்கப்பட்டது என்பதை குறிப்பிட்டுள்ள ஃபோர்ப்ஸ் நிறுவனம், பிரபலங்களின் வருவாயை கணக்கில் கொண்டும், சமூக ஊடகம் மற்றும் அச்சு ஊடகங்களில் பிரபலங்களுக்கு உள்ள செல்வாக்கை வைத்தும் இதனை கணக்கிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: