You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அரசாங்கம் விமர்சனத்தை கேட்க விரும்பவில்லை: தொழிலதிபர் கிரண் ஷா குற்றச்சாட்டு
பொருளாதாரத்தைப் பற்றி எந்த விமர்சனத்தையும் கேட்பதற்கு அரசாங்கம் விரும்பவில்லை என்று விமர்சித்துள்ளார் தொழிலதிபர் கிரண் மஜும்தார் ஷா.
அரசாங்கத்தைப் பற்றி விமர்சிப்பதற்கு தொழிலதிபர்கள் அஞ்சும் சூழ்நிலை இருக்கிறது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையிலேயே தொழிலதிபர் ராகுல் பஜாஜ் பேசியதற்கு மறுநாளே கிரண் ஷா இவ்வாறு கூறியுள்ளார்.
ஆனால், பயோகான் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநராக இருக்கிற கிரண், இதற்கு முன்பும் இது தொடர்பாகப் பேசி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராகுல் பஜாஜ் பேச்சு குறித்த ஓர் ஊடகத்தின் ட்வீட்டை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த கிரண்,
"வளர்ச்சி மற்றும் நுகர்வுக்கு புத்துயிர்ப்பு அளிப்பதற்கான தீர்வுகளைக் காண இந்திய தொழில்துறையை மத்திய அரசு அணுகும் என்று நம்புகிறேன். இதுவரை நாங்கள் விலக்கப்பட்டவர்களாகவே இருக்கிறோம். நம் பொருளாதாரத்தைப் பற்றி எந்த விமர்சனத்தையும் அரசு கேட்க விரும்பவில்லை" என்று குறிப்பிட்டார்.
நிர்ரமலா சீதாராமன் பதில்
முன்னதாக, ராகுல் பஜாஜ் பேச்சு குறித்து ட்விட்டரில் பதிலளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "ராகுல் பஜாஜ் எழுப்பிய பிரச்சனைகள் எப்படி கையாளப்பட்டன என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பதில் அளிக்கிறார். கேள்விகள், விமர்சனங்கள் செவிமடுக்கப்படுகின்றன, பதில் அளிக்கப்படுகின்றன, கவனிக்கப்படுகின்றன. எப்போதும் ஒருவர் தமக்குள்ள கருத்தை பரப்புவதற்குப் பதில் பதிலைத் தேடுவது சிறந்தது. ஏனெனில் அந்தக் கருத்து கவனம் பெறும்போது அது தேச நலனைப் பாதிக்கக்கூடும்" என்று தெரிவித்துள்ளார்.
அந்த நிகழ்வில் பஜாஜ் தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த பேசிய அமித்ஷா, "நீங்கள் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து, யாரும் பயத்தில் இல்லை என்பது என்னால் உறுதியாகக் கூற முடியும்" என்று தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்