ஹைதராபாத்தில் எரிந்த நிலையில் கிடைத்த இன்னோர் இளம்பெண் உடல்

இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தின் தலைநகர் ஹைதராபாத்தில் 27 வயதாகும் பெண் கால்நடை மருத்துவர் ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதே மாநகரில் இன்னோர் இளம் பெண்ணின் சடலம் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பெண் கால்நடை மருத்துவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு தீ வைத்து கொல்லப்பட்ட நிலையில், இன்று, வியாழக்கிழமை அதிகாலை ஷாத் நகர் அருகில் போலீசார் அவரது உடலை கண்டெடுத்துள்ளனர்.
இன்று இரவு ஷம்சாபாத் அருகே 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் உடல் 80% தீக்காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது.
சித்தல குண்டா எனும் இடத்தில் உள்ள கோயில் ஒன்றின் அருகே உடல் கிடைத்துள்ளது.
இது கொலையா தற்கொலையா என்று இதுவரை தெரியவில்லை.
அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை ஆராய்ந்து விசாரணை செய்து வருவதாக காவல் இணை ஆணையர் பிரகாஷ் ரெட்டி தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












