காந்திக்கு ஆர்.எஸ்.எஸ் உடன் உண்மையில் எப்படிப்பட்ட உறவு இருந்தது?

ஆர்.எஸ்.எஸ். உடன் காந்தி
    • எழுதியவர், உர்விஷ் கோத்தாரி
    • பதவி, மூத்த பத்திரிகையாளர்

(இந்தக் கட்டுரையில் வரும் கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகளே. இவை பிபிசியின் கருத்துகல் அல்ல - ஆசிரியர்.)

சரியாகக் கூறினால் இந்தக் கட்டுரையின் தலைப்பில் உள்ள கேள்வியில் 'உண்மையில்' என்ற வார்த்தை தேவையில்லைதான். ஆனால் சில நேரங்களில் நன்கு நிரூபிக்கப்பட்ட உண்மைகள் சிதைக்கப்படுகின்றன அல்லது நீர்த்துப் போகச் செய்யப்படுகின்றன. சிலரால் தாங்கள் விரும்பும் வகையில் வரலாற்றை உருவாக்க, அவை சிதைக்கப்படுகின்றன.

''முஸ்லிம் சமுதாயத்தில் இருந்த தீவிரவாதிகள் மற்றும் ஜிகாதிகளிடம் காந்திஜி சரணடைந்துவிட்டார். அதுகுறித்து ஆட்சேபங்கள் உள்ளன என்பது உண்மையாக இருந்தாலும் காந்திஜி மீது ஆர்.எஸ்.எஸ். மரியாதை வைத்திருந்தது,'' என்று ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் (ஆர்.எஸ்.எஸ்.) அமைப்பின் முன்னாள் தலைவர் கோல்வல்கர் காந்தி மீதான தங்கள் மரியாதையை ஒரு கட்டுரையில் நிரூபிக்க முயற்சி செய்துள்ளார்.

நிரூபிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் இந்தக் கட்டுரையை பலரும் நிராகரித்துவிட்டனர். எனவே , ஆர்.எஸ்.எஸ். உடன் காந்திஜிக்கு இருந்த உறவை பரவலான கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டுமே தவிர, சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்க்கக் கூடாது என்று ஆர்.எஸ்.எஸ்-ன் இன்னொரு பிரதிநிதி கூறியுள்ளார்.

கோல்வால்கர்

பட மூலாதாரம், WWW.GOLWALKARGURUJI.ORG

படக்குறிப்பு, குரு கோல்வல்கர்

''காந்தி கொலை செய்யப்பட்டதில் ஆர்.எஸ்.எஸ்.-க்குத் தொடர்பு இல்லை என்று சர்தார் வல்லபாய் படேல் உறுதியாக அறிந்து கொண்டபோது, ஆர்.எஸ்.எஸ். மீதான தடை நீக்கப்பட்டது, அதுவும் எந்த நிபந்தனையும் இல்லாமல் நீக்கப்பட்டது,'' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதனால்தான் ஆர்.எஸ்.எஸ். உடன் காந்திக்கு உண்மையில் எப்படிப்பட்ட உறவு இருந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது

பாரத மாதா என்பது இருவருக்கும் ஒன்றல்ல

வகுப்புக் கலவரத்தைத் தடுத்து நிறுத்துவதற்காக 1947ல் காந்தி டெல்லிக்குச் சென்றபோது, பங்கி காலனி என்ற பகுதியில் தங்கினார். அங்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பயிற்சிகள் நடந்து கொண்டிருந்தன.

தினமும் இந்து இளைஞர்கள் அங்கே ஒன்று கூடி, அணிவகுப்பு நடத்தி, லத்தியுடன் உடற்பயிற்சிகள் செய்வார்கள். பாரத மாதா கொடியை ஏற்றி அவர்கள் மரியாதை செலுத்துவார்கள்.

அவர்களுடைய 'இந்து மாதா' என்பது, நாட்டின் அன்னையாக, சாதி, சமூகம், மதம் அல்லது இன வித்தியாசம் பாராத காந்தியின் மனதில் இருந்த 'இந்து மாதா'வில் இருந்து வேறுபட்டிருப்பதை, காந்தியின் செயலாளர் பியாரேலால் கவனித்தார். அவர் இவ்வாறு எழுதுகிறார்.

''அவர்களுடைய அன்னை என்பது மகா காளி போன்றவர். தன்னுடைய இருப்பை ஏற்றுக் கொள்ள மறுப்பவர்களையும், மற்ற மதங்களைச் சேர்ந்தவர்களையும் தண்டிக்க வேண்டும் என்று கூறக் கூடியவர். அதாவது முஸ்லிம் சமூகத்தவர்களை என்று அர்த்தத்தில் கூறுவதாக இருந்தது.''

ஆர்.எஸ்.எஸ். உடன் காந்தி

''வகுப்புவாத இந்துக்களின் ராணுவம் போன்ற அமைப்பாக அது இருந்தது. முஸ்லிம்களின் தேசியக் காவலர்கள் அமைப்பைப் போன்றதாக இருந்தது.''

''அவர்களுடைய மத அடிப்படைவாத சித்தாந்தம் கடைசியில் தேசத் தந்தையின் உயிரைப் பறித்துவிட்டது.'' (`பூர்ணாஹுதி-1. பக்கம் 234, மணிபாய் பி. தேசாயின் குஜராத்தி மொழி பெயர்ப்பு)

தன்னுடன் இருந்த பிரிஜ்கிருஷ்ண சாண்டிவாலாவிடம் ஆர்.எஸ்.எஸ். வரலாறு பற்றி காந்தி பின்வருமாறு விளக்கியுள்ளார்:

''ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முதலாவது தலைவர் நல்ல சிந்தனைகளைக் கொண்டவர். ஆனால் இப்போது சங் அமைப்பு உள்நோக்கத்துடன் செயல்படுகிறது. அவர்களுடைய செயல்பாட்டின் போக்கு மாறிவிட்டது. சங் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இப்போது வன்முறையை நம்புகிறார்கள்.'' (`பாபுனி சேவமா', பிரிஜ்கிருஷ்ண சாண்டிவாலா, பக்கம் 74)

சங் பயிற்சி முகாம்கள் சிலவற்றை காந்திஜி பார்வையிட்டிருக்கிறார். அந்தப் பயணங்கள், குறிப்பாக 1934ல் ஜம்னலால் பஜாஜ் உடன் அவர் சென்ற பயணத்தைக் குறிப்பிட்டு, ஆர்.எஸ்.எஸ். மீது காந்திக்கு துவேஷம் எதுவும் இல்லை என்றும், சங் அமைப்பின் சில மாண்புகள் பற்றி அவருக்கு நல்ல எண்ணம் இருந்தது என்றும் கூறுகிறார்கள்.

கோல்வால்கர்

பட மூலாதாரம், WWW.GOLWALKARGURUJI.ORG

இதை நிரூபிக்க முயற்சிக்கும்போது, காந்தியைக் கொலை செய்ததில் சங் அமைப்புக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்பு இருந்தது என்ற வெறுப்பில் இருக்கும் மக்களின் உணர்வுகளை எப்படி மாற்ற முடியும் என்ற கேள்வி எழுகிறது.

'சங் பரிவார்' பற்றி காந்திக்கு நல்ல எண்ணம் இருந்ததாகச் சொல்வதன் மூலம், இந்த மக்களின் உணர்வுகளைத் தணித்துவிட முடியுமா? யார் மீதும் காந்திக்கு வெறுப்பு இருந்தது இல்லை என்பது உண்மை.

வகுப்புவாத சக்திகள் மற்றும் வன்முறைகளை எதிர்த்தபோதும், விமர்சனங்கள் செய்தபோதும் கூட, மனிதகுலத்தின் நன்மைகள் மீது கொண்டிருக்கும் நம்பகத்தன்மை மீது அவர் நம்பிக்கை வைத்திருந்தார்.

காந்தியின் அந்தத் தோழமை மற்றும் தாராள சிந்தனைகளை இந்து அடிப்படைவாத குழுக்கள் எதிர்த்து வந்தன. ஆனால் சங் பற்றி காந்தி சொன்ன அதே பொதுவான கருத்தைப் பயன்படுத்திக் கொள்ள இப்போது அவர்கள் முயற்சி செய்கிறார்கள்.

அதே திறந்த மனதுடன் கூடிய தாராள சிந்தனையுடன் கூடிய கருத்துகளைப் பயன்படுத்தி, தங்களுக்குச் சாதகமான புதிய வரலாற்றை உருவாக்க முயற்சிக்கிறார்கள்.

காந்தியும் கோல்வல்கரும்

சங் அமைப்பின் தலைவர் கோல்வல்கர் 'குருஜி' , காந்தி மீது மிகுந்த மரியாதை கொண்டிருந்தார். விசேஷமான கௌரவம் அளித்து, பல சமயங்களில் பாராட்டிய, வார்த்தைகளை வைத்துக் கொண்டு இப்போது வாதிடுகிறார்கள். ஆனால் உண்மையில் அவர் அவ்வாறு நினைத்தாரா என்பதுதான் கேள்வியாக உள்ளது.

ஏனெனில் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் 'தேசியவாதத்துக்கு' நேர் எதிரானதாக அவருடைய சிந்தனைகள் இருந்தன. இந்த நாடு இந்துக்களுக்கு மட்டுமின்றி, எல்லோருக்கும் சொந்தமானது என்று காந்தியும் மற்றவர்களும் நம்பிய நிலையில், சங் சித்தாந்தம் அதற்கு முரண்பட்டதாக இருந்தது.

ஆர்.எஸ்.எஸ். உடன் காந்தி

'பழைய ஊடுருவலர்களை' (முஸ்லிம்கள் என படிக்கவும்) சேர்த்ததாக இருக்கும் வகையில், ஜனநாயகத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக இந்து தேசத்தை விட்டுக் கொடுக்கும் சிந்தனைக்கு கோல்வல்கர் எதிர்ப்பு தெரிவித்தார்.

முஸ்லிம்கள் மட்டுமின்றி, பிற மதங்களைச் சேர்ந்த அனைவருமே இரண்டாம் தரத்தினராகக் கருதப்பட வேண்டும், அதுமட்டுமின்றி, அவர்களுக்குக் குடிமக்கள் என்ற உரிமைகளை வழங்கக் கூடாது என்று அவர் கூறினார். (சுதந்திரத்துக்கான இந்தியாவின் போராட்டம் பக்கம் 437-8)

காந்தியுடன் 'ஒரே கருத்து இல்லாத' விஷயத்தை கோல்வல்கர் எந்த வார்த்தைகளால் வெளிப்படுத்தினார் என்பதை நாம் அறிந்திட வேண்டும். `முஸ்லிம் சமூகத்தில் உள்ள தீவிரவாதிகள் மற்றும் ஜிகாதிகளிடம் அவர் (காந்திஜி) சரணடைந்துவிட்டார்' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

''இந்து - முஸ்லிம் ஒற்றுமை இல்லாமல் சுயராஜ்யம் சாத்தியமற்றது என்று கூறிய நபர், சமூகத்திற்கு மிகப் பெரிய மோசடியை செய்துள்ளார்'' என்று அவர் எழுதியுள்ளார்.

''நமது மகத்தான மற்றும் பழமையான (இந்து) மக்களின் உயிரோட்டத்தை அவர் கொன்றுவிட்டார்.''

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

''அனைத்து இந்துக்களும் முஸ்லிம்களாக மாறிவிடுவதுதான் இந்து - முஸ்லிம் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான எளிய வழி,'' என்று ஏளனமாக அவர் கூறியுள்ளார்.

சங் நிகழ்ச்சி ஒன்றை காந்திஜி பார்வையிட்டபோது, ''இந்து மதம் தந்த அற்புதமான மனிதர்'' என்று அவரைக் குறிப்பிட்டனர். நிகழ்ச்சியில் பேசிய காந்திஜி, ''இந்துவாக இருப்பதில் எனக்குப் பெருமைதான். ஆனால் என்னுடைய இந்து மதம் சகிப்புத்தன்மை அற்றதாகவோ அல்லது பல்வேறு குழுக்களாகப் பிளவுபட்டதாகவோ இல்லை,'' என்று கூறினார்.

''எனக்குப் புரிந்த வரை, அனைத்து மதங்களிலும் உள்ள சிறந்த விஷயங்களை ஏற்றுக் கொண்டிருப்பது தான் இந்து மதம். அதுதான் அதன் மகத்துவம்.''

''இந்து அல்லாதவர்கள் இந்த தேசத்தில் வாழ விரும்பினால், அவர்களுக்கு தேசத்தில் சமமான மற்றும் மரியாதைக்குரிய இடம் இல்லை, முஸ்லிம்கள் இரண்டாம் தர குடிமக்கள் அந்தஸ்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இந்துக்கள் நம்பினால். அதுதான் இந்து மதத்தின் முடிவாக இருக்கும்.''

நேருவும் மற்றும் காந்தி

பட மூலாதாரம், GANDHI FILM FOUNDATION

தங்களுடைய கொள்கைகளில் இஸ்லாத்துக்கு எதிரான துவேஷம் எதுவும் கிடையாது என்று அவருக்கு சங் உறுதியளித்தது.

அந்த வாக்குறுதியை காந்தி மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு, ''இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டதன் பின்னணியில் உங்கள் அமைப்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அது கவலைக்குரியது,'' என்று கூறியுள்ளார். (பூர்ணாஹுதி-4, பக்கம் 18)

அவருடைய உரைக்குப் பிறகு, அவரிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வி, எந்த மாதிரியான சித்தாந்தத்தில் சங் நம்பிக்கை கொண்டிருந்தது என்பதை வெளிக்காட்டுவதாக இருந்தது.

''அடக்கி ஆள்பவரைக் கொல்வது இந்து தர்மத்தில் அனுமதிக்கப் பட்டிருக்கிறது இல்லையா? அப்படி இல்லை என்றால், கௌரவர்களை அழிக்கும்படி ஸ்ரீகிருஷ்ணர் கூறிய ஆலோசனைகளைப் பற்றி நீங்கள் என்ன சொல்வீர்கள்?'' என்று அவரிடம் கேட்கப்பட்டது.

அடக்குமுறை செய்பவர் யார் என்பதை முடிவு செய்வதற்கு முன்னதாக, ஒருவர் வெறுப்புணர்வுகளைக் கைவிட்டு குற்றச்சாட்டுகள் இல்லாதவராக இருக்க வேண்டும், நீதியைத் தர வேண்டிய அந்தப் பொறுப்பு சட்டபூர்வ அரசாங்கம் மற்றும் நீதிபதிகளுக்கு உரியது என்றும், சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு நீதி வழங்க முடியாது என்றும் அவர்களுக்குக் கூறியுள்ளார் காந்தி. (பூர்ணாஹுதி-4, பக்கம் 18)

நம்பகத்தன்மை இல்லாத உறுதிமொழிகள்

காந்தியிடம் பல முறை சங் உறுதிமொழிகள் அளித்துள்ளது. அது உண்மையாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் மற்ற வகுப்புவாத சக்திகளின் வாக்குறுதிகளைப் போல இதனையும் காந்திஜி ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

கோல்வால்கர்

பட மூலாதாரம், WWW.GOLWALKARGURUJI.ORG

கோல்வல்கருடன் நடந்த ஒரு சந்திப்பின்போது, ''உங்கள் அமைப்பின் கரங்களிலும் ரத்தக் கறை படிந்திருப்பதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது,'' என்று காந்தி கூறியுள்ளார். அந்தப் புகாரை குருஜி மறுத்தார். யாரையும் பகைவராக தங்கள் அமைப்பு பார்ப்பதில்லை என்று கூறியுள்ளார்.

''முஸ்லிம்களைக் கொல்ல வேண்டும் என்ற செயல்திட்டம் எதுவும் எங்களிடம் இல்லை. இந்து மதத்தைக் காப்பதற்கு எங்கள் அமைப்பு தன் சக்தி முழுவதையும் பயன்படுத்துகிறது. எங்கள் அமைப்பு அமைதியை விரும்புகிறது. எங்களுடைய இந்த சிந்தனைகளை நீங்கள் வெளியில் தெரிவிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.'' (டெல்லி டைரி, பக்கம் 11)

இதற்குப் பதில் அளித்த காந்தி, ''நீங்கள் கூறியவை எல்லாம் உங்களுடைய மனதில் இருந்து வந்த வார்த்தைகள் என்றால், அதை உங்கள் வாயால் சொல்ல மக்கள் கேட்பது நல்லதாக இருக்கும்,'' என்று கூறினார் (பூர்ணாஹுதி-4, பக்கம் 17)

பின்னர் தன்னுடைய பிரார்த்தனையின்போது கோல்வல்கரின் கோரிக்கை பற்றி காந்திஜி குறிப்பிட்டார்.

இருந்தபோதிலும், அதற்குப் பிறகும் ஆர்.எஸ்.எஸ்-இன் வன்முறை செயல்கள் பற்றி காந்திக்கு தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருந்தன.

ஆர்.எஸ்.எஸ். உடன் காந்தி

பட மூலாதாரம், KEYSTONE/GETTY IMAGES

கோல்வல்கருடன் நடந்த ஒரு சந்திப்பின்போது, காந்திஜியின் உடனிருந்த ஒருவர், அகதிகள் முகாம்களில் சங் அமைப்பினர் சமுதாய சேவை ஆற்றியபோது ஒழுக்கம் மற்றும் கடின உழைப்பை வெளிப்படுத்தினார்கள் என்று கூறினார். அதற்குப் பதில் அளித்த காந்தி, ''ஹிட்லரின் நாஜி படையினரும், முசோலினியின் பாசிஸவாதிகளும் இதேபோன்ற சேவைகளை செய்திருக்கிறார்கள் என்பதை மறந்துவிட வேண்டாம்,'' என்று கூறியுள்ளார்.

ஜம்னலால் பஜாஜ் உடன் சங் நிகழ்ச்சிக்கு சென்றபோது எளிமை மற்றும் ஒழுக்கத்தால் காந்தி ஈர்க்கப்பட்டார் என்று தொடர்ந்து குறிப்பிட்டு வருகிறார்கள். அவர்களைப் பற்றி காந்தி பிற்காலத்தில் என்ன மாதிரியான கருத்து கொண்டிருந்தார் என்பதையும் அத்துடன் சேர்த்து குறிப்பிட வேண்டும்.

கோல்வல்கர் மற்றும் காந்திஜி இடையிலான உரையாடல் பற்றி பியாரேலால் குறிப்பிட்டுள்ளார். அவருடைய குறிப்பின்படி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பை ''சர்வாதிகார மனப்போக்கு கொண்ட வகுப்புவாத அமைப்பு'' என்று காந்திஜி கூறினார் என்று உள்ளது. (பூர்ணாஹுதி-4, பக்கம் 17)

ஆர்.எஸ்.எஸ். உடன் காந்தி

பட மூலாதாரம், KEYSTONE/GETTY IMAGES

அடிப்படைவாத இந்து சித்தாந்தம்

காந்தி கொல்லப்பட்டதற்கும் அடிப்படைவாத இந்து சித்தாந்தத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், காந்திஜியை மகத்தான இந்துவாக தாங்கள் நம்புவதாகவும் நிரூபிக்க சங் அமைப்பினர் விரும்புகிறார்கள். இதுபோன்ற பாதி உண்மைகளுடன் காந்தி மற்றும் ஆர்.எஸ்.எஸ். இடையிலான தொடர்புக்கு புதிய அர்த்தத்தைக் கற்பிக்க விரும்புகிறார்கள்.

அதற்காக பல்வேறு வழிமுறைகளை அவர்கள் கையாள்கிறார்கள். இருந்தபோதிலும் காந்திஜியின் மனமும், செயல்பாடுகளும் இந்து - முஸ்லிம்களின் ஒற்றுமை என்பதாகவே இருந்தது.

இந்து மற்றும் முஸ்லிம்களின் ஒற்றுமையை தொடர்ந்து எதிர்த்துக் கொண்டே இருந்தால், காந்தி மீது தங்களுக்கு மரியாதை இருப்பதாகக் கூறிக் கொள்வதில் உண்மையான அர்த்தம் கிடையாது. அவ்வாறு வெளிப்படுத்தப்படும் மரியாதை வெறும் பிரசாரமாகவோ அரசியல் விதையாகவோதான் இருக்கும். அது உண்மையானதாக இருக்காது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :