நாம் தமிழர் சீமான் நேர்காணல்: "பசுமாடு, பக்கத்து நாடு, ஜெய் ஸ்ரீராம்" - ஆளும் அரசின் 3 கோஷங்கள்

"பசுமாடு, பக்கத்து நாடு, ஜெய் ஸ்ரீராம்," இவைதான் ஆளும் அரசின் மூன்று கோஷங்கள் எனக் கூறினார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.
"காஷ்மீருக்கு நீதி கேட்கும் ஒன்றுகூடல்" என்ற தலைப்பில் இன்று (வியாழக்கிழமை) டெல்லியில் பேரணி நடைபெற்றது.
சிரோன்மணி அகாலி தளம் (அமிர்தசரஸ்) முன்னெடுத்த இந்த பேரணியில் தமிழகத்திலிருந்து நாம் தமிழர் கட்சி, தமிழ்த் தேசியப் பேரியக்கம் உள்ளிட்ட அமைப்புகள் பங்கேற்றன.
பேரணிக்குப் பின்பு பிபிசி தமிழிடம் பேசிய சீமான், "பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு குறித்துப் பேசும் நீங்கள், ஏன் சீனா ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து பேசுவதில்லை?" என்று கேள்வி எழுப்பினார்.
"காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து இல்லை என்றால் இந்திக்கு மட்டும் ஏன் சிறப்பு அந்தஸ்து" என்றார்.
பிபிசி தமிழின் மு. நியாஸ் அகமதுடனான நேர்காணலில் இந்தி, காஷ்மீர், அருணாசலப் பிரதேச எல்லை விவகாரம், மதமாற்றம் எனப் பல விஷயங்களை பேசி இருக்கிறார்.
நேர்காணலை விரிவாகக் காண,
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












