பெரியார் எந்த அளவு வட இந்திய இளைஞர்களிடம் சென்று சேர்ந்திருக்கிறார்?

பெரியார்: எந்த அளவுக்கு வட இந்திய இளைஞர்களிடம் சென்று சேர்ந்திருக்கிறார்?

பட மூலாதாரம், DHILEEPAN RAMAKRISHNAN

பெரியார் எந்த அளவுக்கு வட இந்திய மக்களிடம் சென்று சேர்ந்திருக்கிறார்?

உடன்படுகிறார்களோ மறுக்கிறார்களோ தென்னிந்திய இளைஞர்களில் பெரும்பாலானவர்கள் பெரியாரை அறிந்து வைத்திருக்கிறார்கள்.

பெரியாரின் கருத்தை சுற்றித்தான் தமிழகத்தில் அரசியல் இன்றும் நடக்கிறது. அவரது கருத்தியலை ஒப்புக் கொண்டவர்கள் அவரது படம் பொறித்த சட்டையை அணிந்து அவரது கொள்கைகளை பரப்புகிறார்கள். அவரது கருத்தை மறுப்பவர்கள் அவரது சிலையை உடைக்கிறார்கள்.

தேர்தல் முடிவும், பெரியாரும்

2019 இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் 40 தொகுதிகளில் 39 தொகுதிகளை திமுக கூட்டணி கைப்பற்றியது. அப்போது இதற்கு காரணமாக செயற்பாட்டாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டது பெரியார்தான்.

அவரது கொள்கைகள் வேரூன்றி இருப்பதால்தான் வலதுசாரி கருத்து கொண்ட பாரதிய ஜனதா கட்சியால் வெல்ல முடியவில்லை என்கிறார்கள் இங்குள்ள பெரியாரிய சிந்தனையாளர்கள்.

தமிழகத்தில் மட்டுமல்ல வடக்கிலும் இது குறித்த விவாதம் நடந்தது.

வட இந்திய சிந்தனையாளர்கள் பெரியாரிய தத்துவங்கள் வடக்கில் பரவி இருந்தால் பாரதிய ஜனதா கட்சி இங்கு வென்று இருக்காது என்றார்கள்.

திராவிடம் 2.0 செயற்பாட்டாளர்கள் பெரியாரை வட இந்தியாவில் சேர்ப்பதுதான் எங்கள் இலக்கு என்றார்கள்.

சரி... எந்த அளவுக்கு பெரியாரை வட இந்திய இளைஞர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள்?

விந்திய மலைக்கு வடக்கே உள்ள இளைஞர்கள் பெரியாரை அறிந்துள்ளார்களா? அவரது கொள்கைகளை படித்து இருக்கிறார்களா? குறைந்தபட்சம் அவர் குறித்த ஏதோ ஒரு செய்தியை கடந்து வந்திருக்கிறார்களா?

அதற்கான பதிலை இதோ கீழே உள்ள காணொளியில் காணுங்கள்:

காணொளி தயாரிப்பு: பா.காயத்திரி அகல்யா

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

Presentational grey line

பெரியார் குறித்த பிற கட்டுரைகள் மற்றும் காணொளிகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: