You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சந்திரயான் 2: இணையத்தில் இதயங்களை வென்ற இஸ்ரோ விஞ்ஞானிகள்
இந்தியாவின் நிலவுப் பயணத் திட்டமான சந்திரயான் 2 எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியாத சூழலில், இந்த முயற்சிக்கு இந்தியா முழுவதுமுள்ள சமூக ஊடகப் பயனாளிகள், இஸ்ரோ விஞ்ஞானிகளின் இந்த முயற்சியைப் பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.
சந்திரயான் 2-ன் தரையிறங்கும் கலானான (லேண்டர்) விக்ரம் நிலவின் மேற்பரப்புக்கு 2.1 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்தபோது லேண்டர் விக்ரமுடன் தகவல் தொடர்பு இழப்பட்டதாக இஸ்ரோ கூறியுள்ளது.
முதல் கட்டத்தில் அதன் செயல்பாடு சிறப்பாக இருந்ததாக கூறிய இஸ்ரோ தலைவர் சிவன், பின்னர் லேண்டரில் இருந்து தரை கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பு இழந்துவிட்டதாக கூறினார்.
இந்நிலையில் ட்விட்டரில் #isro #ProudOfIsro #chandrayaan2 போன்ற ஹாஷ்டேகுகள் உலகளவில் டிரண்ட் ஆகி வருகின்றன.
இந்த நிகழ்வை மக்கள் மிகவும் நேர்மறையாக எடுத்து வருவதை காண முடிகிறது. இதையொட்டிய வேறு சில பதிவுகளும் சமூக ஊடகங்களில் பிரபலமாகி வருகின்றன.
சந்திரயானின் லேண்டர் உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது என்று அறிவிக்கப்பட்டதால், 'தனது நிலவுடனான' தொடர்பை புதுப்பிக்க கவிதைத் தூது விடுகிறார் ஒருவர்.
பல்லாயிரம் மைல்களை கடந்து சென்றுள்ளது சந்திரயான் 2 அதனால் இந்த 2 கிலோ மீட்டரை பற்றி கவலை வேண்டாம் என இந்த பதிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நம்பிக்கையை இழக்க வேண்டாம் தொடர்ந்து நாங்கள் இஸ்ரோ பக்கம் நிற்போம் என சிலர் பதிவு செய்துள்ளனர்.
சிலர் கிரிக்கெட் உலக்கோப்பை ஆட்டத்தின் அரையிறுதி போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் மகேந்திர சிங் தோனி ஆட்டமிழந்ததையும் இதையும் ஒப்பிட்டுள்ளனர்.
தொடர்பு மீண்டும் கிடைக்கும் என சிலர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். .
இந்தியாவில் மக்கள் அனைவரும் உங்கள் பக்கமே நிற்பார்கள் என இஸ்ரோ தலைவருக்கு சிலர் நம்பிக்கை அளித்துள்ளனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்