1.76 லட்சம் கோடி ரூபாய் உபரி நிதியை மத்திய அரசுக்கு வழங்குகிறது ஆர்பிஐ

1.76 லட்சம் கோடி ரூ. உபரி நிதியை மத்திய அரசுக்கு வழங்குகிறது ஆர்பிஐ

பட மூலாதாரம், Getty Images

முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் பிமல் ஜலான் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை ஏற்று மத்திய அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி உபரி நிதியை வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது என ஏஎன்ஐ செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் வசம் ரூ.9.6 லட்சம் கோடி உபரி நிதி உள்ளதாக கூறப்பட்ட நிலையில், இந்த உபரி நிதியில் இருந்து 1.76 லட்சம் கோடியை மத்திய அரசுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

இந்த விவகாரம் குறித்து ஆராய்வதற்கு ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் பிமல் ஜலான் தலைமையில் 6 உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்று கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது.

இந்நிலையில், திங்கள்கிழமை நடந்த ஆர்பிஐ மத்திய குழு கூட்டத்தில் ஜலான் குழுவின் பரிந்துரையின் பேரில் மத்திய அரசுக்கு 1.76 லட்சம் கோடி உபரி நிதியை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் வெளியான சில தகவல்களின்படி இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.3 சதவீதம் பற்றாக்குறை இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில், ரிசர்வ் வங்கி வழங்கும் உபரி நிதி இந்த பற்றாக்குறையை சமாளிக்க உதவும் என்று கருதப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: