ஜம்மு காஷ்மீரின் சில மாவட்டங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் மீண்டும் தொடக்கம்: இயல்பு நிலை திரும்புகிறதா?

இந்தியா நிர்வகிக்கும் காஷ்மீரில் கடந்த 12 நாட்களாக முடக்கப்பட்டிருந்த தகவல் தொடர்பு சேவைகள், ஓரளவிற்கு மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளன.
ஜம்முவின் ஐந்து மாவட்டங்களில் 2ஜி மொபைல் இண்டர்நெட் சேவைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. காஷ்மீர் பள்ளத்தாக்கில் லேண்ட்லைன் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.
தற்போது வரை 17 டெலிபோன் எக்ஸ்சேன்ஜுகள் செயல்படத் தொடங்கியுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை மாலையில் இருந்து அனைத்து டெலிபோன் சேவைகளும் செயல்பட ஆரம்பிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
இந்தியா நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரில் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதியில் இருந்து அனைத்து தொலைத்தொடர்பு சேவைகளும் முடக்கப்பட்டிருந்தன.
சில முக்கிய பகுதிகளை தவிர காஷ்மீர் பள்ளத்தாக்கின் மற்ற இடங்களில் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் அனைத்து டெலிபோன் சேவைகளும் தொடங்கப்படும் என்று ஜம்மு காஷ்மீரின் முதன்மை செயலாளர் ரோகித் கன்சல் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், AFP
ஜம்முவில் ஏற்கனவே லேண்ட்லைன் மற்றும் மொபைல் சேவைகள் சரிசெய்யப்பட்டுவிட்டதாகவும், ஐந்து மாவட்டங்களில் இணைய சேவைகளும் சீர்செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
ஜம்மு பிரிவின் கீழ் இருக்கும், ஜம்மு, ரேசி, சம்பா, கத்துவா மற்றும் உதம்பூர் ஆகிய 5 மாவட்டங்களில் 2ஜி இணைய சேவைகள் வேலை செய்வதாக அங்கிருக்கும் செய்தியாளர் மோஹித் கந்தாரி கூறுகிறார்.
அதே நேரத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டங்களான ரஜுரி, பூன்ச், கிஷ்த்வார், தோடா மற்றும் ரம்பான் போன்ற பகுதிகளில் இணைய சேவைகள் இன்னும் தொடங்கப்படவில்லை.
"வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்ப பள்ளிகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் திங்கள் முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் செயல்படும்" என்றும் ரோகித் கன்சல் தெரிவித்தார்.
இதுவரை எந்த அசம்பாவிதங்களும் நடந்ததாக தெரிவிக்கப்படவில்லை. பொதுப் போக்குவரத்து இயல்பாகிவிட்டது. பல்வேறு கிராமப்புற பகுதிகளில் நிலைமை இயல்பாக இருப்பதாக எங்களுக்கு தகவல்கள் வந்துள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












