ராஜஸ்தானில் பலத்த மழையால் கூரை சரிந்து விழுந்து 14 பேர் உயிரிழந்தனர்

பட மூலாதாரம், AFP
ராஜஸ்தான் மாநிலத்தில் ஞாயிறன்று பலத்த காற்றுடன் பெய்த மழையால் கூடாரம் ஒன்று சரிந்து விழுந்து 14 பேர் உயிரிழந்தனர் மற்றும் 50 பேர் காயமடைந்தனர்.
ராயட்டர்ஸ் செய்தியின்படி கூடாரம் சரிந்தபின் அறுந்து விழுந்த மின் கம்பிகளால் மின்சாரம் பாய்ந்து சிலரும், இடிபாடுகளில் சிக்கி சிலரும் உயிரிழந்தனர்.
சுமார் 300 பேர், ஒரு திருவிழாவுக்காக அங்கே கூடினர் என ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி கூறுகிறது.
ராஜஸ்தான் மாநிலத்தின் வட மேற்கு பகுதியில் உள்ள பார்மர் என்னும் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

பட மூலாதாரம், ANI/Twitter
மாநில இயற்கை பேரிடர் மற்றும் நிவாரண அமைச்சர் பன்வார் லால் மேக்வால் மழை பொழிவு அதிகமானதும் ஏன் மின்சாரத்தைத் துண்டிக்கவில்லை என ஒருங்கிணைப்பாளரிடம் கேள்வி எழுப்பினார்.
சம்பவம் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
இந்திய பிரதமர் நரேந்திர மோதி ட்விட்டரில் , இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததுடன் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புவதாக தெரிவித்திருக்கிறார்.

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












