பேட்ட, விஸ்வாசம் படங்கள் ஒரே சமயத்தில் ரிலீஸ்: யாருக்கு பாதிப்பு? - விவரிக்கும் வினியோகஸ்தர்

பேட்ட

பட மூலாதாரம், Sun Pictures

நாளிதழ்களில் இன்று வெளியான முக்கிய செய்திகளின் தொகுப்பை இங்கே வாசகர்களுக்காக வழங்குகிறோம்

தினத்தந்தி: "பேட்ட, விஸ்வாசம் படங்கள் வசூல் பாதிக்குமா?"

பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற 10-ந் தேதி ரஜினியின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம் படங்கள் திரைக்கு வரும் என்று அறிவித்துள்ளனர். பேட்ட பொங்கலுக்கு வரும் என்று முதலில் அறிவித்ததுமே விஸ்வாசம் தள்ளிப்போகலாம் என்று எதிர்பார்த்தனர். ஆனால் அதுவும் பொங்கலுக்கு உறுதியாக வரும் என்று படக்குழுவினர் அறிவித்து விட்டனர்.

இது இருவரது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தினாலும் தியேட்டர் அதிபர்கள், வினியோகஸ்தர்கள் வசூல் பாதிக்குமோ என்ற குழப்பத்தில் உள்ளனர். பெரிய பட்ஜெட் படங்களை பண்டிகைகளிலும் சிறிய படங்களை மற்ற நாட்களிலும் வெளியிட விதித்திருந்த கட்டுப்பாட்டை கிறிஸ்துமஸ், பொங்கலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் நீக்கி விட்டது. பேட்ட, விஸ்வாசம் படத்தை அதிக தியேட்டர்களில் திரையிட போட்டா போட்டி ஏற்பட்டு உள்ளது.

இது குறித்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க இணை செயலாளர் ஸ்ரீதர், "பேட்ட, விஸ்வாசம் படங்கள் ஒரு வார இடைவெளியில் வந்தால் நல்ல வசூல் பார்க்கும். ஆனால் ஒரே நாளில் இரு படங்கள் வெளியாவது வசூலை நிச்சயம் பாதிக்கும். மொத்தம் உள்ள 1,090 தியேட்டர்களில் சுமார் 600 தியேட்டர்கள் பேட்ட படத்துக்கும், மீதி விஸ்வாசம் படத்துக்கும் ஒதுக்கப்படலாம். முதல் மூன்று, நான்கு நாட்கள் ரசிகர்கள் பார்ப்பார்கள்.

அதன்பிறகுதான் பொதுமக்கள் வருவார்கள். இரண்டு படங்களுக்கும் டிக்கெட் கட்டண விலையை அவர்களால் தாக்குப்பிடிக்க முடியமா? என்பது சந்தேகம். உதாரணத்துக்கு ரூ.5 கோடி வசூலித்தால் ரூ.3 கோடி ஒரு படத்துக்கும், ரூ.2 கோடி இன்னொரு படத்துக்கும் பிரியும். ஒரே தேதியில் இரண்டு படங்கள் வெளியாவதை தியேட்டர் அதிபர்கள், வினியோகஸ்தர்கள் வரவேற்க மாட்டார்கள். ஜி.எஸ்.டி வரிகுறைப்பால் டிக்கெட் கட்டணம் குறைகிறது. இதற்காக மத்திய-மாநில அரசுகளுக்கு நன்றி." என்று கூறியதாக விவரிக்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

இலங்கை

தினமணி: கஜ புயல் நிவாரணம் ரூ.1,146 கோடி: மத்திய அரசு ஒப்புதல்

கஜ புயல்

கஜ புயல் பாதிப்புக்கு தமிழகத்துக்கு கூடுதல் நிவாரண நிதியாக ரூ.1,146.12 கோடியை ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

"அண்மையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஆகியோரை அதிமுக எம்பிக்கள் நேரில் சந்தித்து கஜா புயல் நிவாரணம் அளிக்க வலியுறுத்தியிருந்தனர்.

டிசம்பர் 19-ஆம் தேதி நிதி மீதான நாடாளுமன்ற நிலைக் குழுவின் கூட்டம் அதன் தலைவர் வீரப்ப மொய்லி தலைமையில் நடைபெற்றது.

அதில், தமிழகத் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், தமிழகத்தைச் சேர்ந்த அதிமுக, திமுக, மார்க்சிய கம்யூனிஸ்ட் எம்.பி.க்கள் பங்கேற்று கஜா புயல் பாதிப்பை செயல் விளக்கம் மூலம் எடுத்துரைத்தனர். இந்தக் கூட்டத்தில் கூடுதல் நிதி வழங்க பரிந்துரைக்கவும் வலியுறுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து, டிசம்பர் 26-ஆம் தேதி தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, மின்துறை அமைச்சர் பி.தங்கமணி ஆகியோர் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், அருண் ஜேட்லி, நரேந்திர சிங் தோமர் ஆகியோரைச் சந்தித்து கஜா புயல் பாதிப்புக்கு உடனடியாக ரூ.5 ஆயிரம் கோடியை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

உயர்நிலைக் கூட்டம்: இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் திங்கள்கிழமை உயர் நிலைக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் இக்குழுவின் உறுப்பினர்களான மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, வேளாண்துறை அமைச்சர் ராதா மோகன் சிங், நீதி ஆயோக் துணைத் தலைவர் டாக்டர் ராஜீவ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தின் போது, கஜா புயல் கூடுதல நிவாரணமாக தமிழகத்துக்கு ரூ.1,146.12 கோடி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது." என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

இலங்கை
இலங்கை

இந்து தமிழ்: கவுசல்யாவை மறுமணம் செய்த சக்திக்கு 3 லட்சம் அபராதம்

கவுசல்யாவை மறுமணம் செய்த சக்திக்கு 3 லட்சம் அபராதம்

கவுசல்யாவை மறுமணம் செய்த இளைஞர் சக்தி வேறொரு பெண்ணை ஏமாற்றியதாக எழுந்த புகார் குறித்து தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைமைக் குழு உறுப்பினர் தியாகு, திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் விசாரணை நடத்தி சக்திக்கு மூன்று லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர் என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.

ஒரு பெண்ணை காதலித்து கைவிட்டதை சக்தி ஒப்புக்கொண்டார். ஆனால், மற்ற குற்றச்சாட்டுகளை மறுத்துவிட்டார். கவுசல்யாவும் தனது தவறை புரிந்து கொண்டார். எனவே, அவர்கள் இருவரும் பொது அவையில் மன்னிப்பு கேட்க வேண்டும். நிமிர்வு கலையகத்திலிருந்து சக்தி வெளியேற வேண்டும். ரூ. 3 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும். 6 மாதங்களுக்கு பொது நிகழ்ச்சிகளில் அவர் பறை இசைக்கக் கூடாது. இதன் பிறகும், தேவையற்ற விமர்சனங்களை பொதுவெளியில் வைத்தாலோ, சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பினாலோ எங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய நேரிடும் அவர்கள் விடுத்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

இலங்கை

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'ஐ,ஐ.டி பேராசிரியர்களில் 3% கூட தலித் இல்லை'

ஐ,ஐ.டி பேராசிரியர்களில் 3% கூட பட்டியலின மக்கள் இல்லை என்கிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி.

23 ஐஐடிகளில் மொத்தமுள்ள 6043 பேராசிரியர்களில் 149 பேர் பட்டியல் சாதியினர், 21 பேர் பட்டியல் பழங்குடிகள் என மனிதவளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மக்களவையில் கூறியதாக விவரிக்கிறது அந்நாளிதழ்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: