You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: "பா.ஜ.க பின்னடைவை சந்தித்ததற்கு காரணம் என்ன?"
தேர்தலில் பிரதமர் மோதி தலைமையிலான பா.ஜ.க பின்னடைவை சந்தித்ததற்கு காரணம் என்ன? என்று பிபிசி தமிழின் சமூக இணையதள பக்கங்களில் கேட்டிருந்தோம்.
அதற்கு நேயர்கள் தெரிவித்த கருத்துகளை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.
"இது பின்னடைவு இல்லை. ராஜஸ்தான் 5 வருடத்திற்கு ஓரு முறை ஆட்சி மாறுவது ம.பியில் 15 வருடமாக பி.ஜே.பி ஆட்சி மக்களுக்கு ஒரு சலிப்பு, அவ்வளவுதான்" என்று தங்கதுரை என்ற நேயர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
"மாற்றுக் கருத்து கொண்டோரை தேசவிரோதிகளாக சித்தரிப்பது, மக்களை மதரீதியாக பிரித்தாள்வது, விலங்களுக்கு உள்ள மரியாதை மனிதர்களுக்கு இல்லாமற்போனது இன்னும் பல காரணங்கள் உள்ளன," என்று இளமுருகு என்பவர் ஃபேஸ்புக்கில் கருத்துத் தெரிவித்துள்ளார்.
"இந்த முறை கிடைத்த ஐந்தாண்டுகளுக்கான ஆட்சி செய்யும் வாய்ப்பு அரிதானது. அதை மக்களுக்கான ஆட்சியாக நடத்தாததின் விளைவு இத்தோல்வி" என்று சம்பத் என்ற நேயர் பதிவிட்டுள்ளார்.
"பணமதிப்பிழப்பு, பெட்ரோல் விலை உயர்வு, ஜிஎஸ்டி, ஒரு ஏழைத்தாயின் மகன் என்று சொல்லி இதுவரை எந்தப் பிரதமரும் இவ்வளவு செலவு செய்து வெளிநாடுகளுக்கு போனதில்லை" என்று பார்த்திபன் என்ற நேயர் பதிவிட்டுள்ளார்.
"மதவாதம், சாதியப் பாகுபாடு, இனவெறி, மொழி பாகுப்பாடு, தலைக்கனம், ஆதிக்கமனோபாவம், விவசாயிகள் புறக்கணிப்பு, பொய்ப்பிரசாரம், மாயப்பிம்பம் உருவாக்குதல், நீட், சிறுப்பான்மையினர் மீது தாக்குதல்" என்று ஜெயக்குமாரி என்பர் பதிவிட்டுள்ளார்.
"கார்ப்பரேட் மற்றும் ஊடகங்கள் மீது வைத்திருந்த அதீத நம்பிக்கையில் அடிதட்டு மக்களை பிழிந்தெடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை சீரழித்து கோபத்தை சம்பாதித்தது தான் தோல்விக்கு முக்கிய காரணம்" என்று பெனில் என்பவர் பதிவிட்டுள்ளார்.
"நேர்மையான அரசை மக்கள் விரும்பவில்லை.சாதனைகளை மக்களிடம் புரியுமாறு கொண்டுசெல்லவில்லை. கிராமங்களில் சரியானமுறையில் பிரசாரம் செய்யப்படவில்லை. உடனடி நிவாரணம் ஆசைப்படும் மக்கள்" என்று வரதராஜன் என்ற நேயர் கூறியுள்ளார்.
"பாஜகவுக்கு இனிமேலும் தோல்விகள்தான் கிடைக்கும். காரணம் அதன் மக்கள் விரோத கொள்கைகள் மற்றும் ஒரு மதம் சார்ந்த செயல்பாடுகள். மதத்தையும் சாதிகளையும் அரசியலுக்காக பயன்படுத்தும் ஒரே கட்சி பிஜேபி தான். ஆகவேதான் அது மக்களின் ஆதரவை இழந்து தோல்விகளைச் சந்திக்க ஆரம்பித்துள்ளது" என்று சுந்தர் என்ற நேயர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
"பணமதிப்பிழப்பு, GST போன்ற தடாலடி பொருளாதார நடவடிக்கைகள் பெரும்பாலும் மக்கள் வெறுப்பையே பெற்றன. எரிவாயு முதல் இராணுவ வாகனங்கள் என எல்லாவற்றையும் தனியார் மைய படுத்துவது, ஒரு பெரிய பணக்கார முதலாளித்துவ மையம் அதன் பின் இருப்பதை உணர்த்துகிறது. ஒற்றை இந்துத்வ ஆதிக்கம் அவர்களது கண்களை அவர்களே குத்த எடுத்துக் கொண்ட கத்தி" என்று ஸ்ரீவித்யா பதிவிட்டுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்