You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
குடிபோதையில் மருத்துவம் பார்த்து தாய், சேய் பலி
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் குடிபோதையில் பெண்ணுக்கு பிரசவ அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
அறுவை சிகிச்சையின்போது குழந்தை இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்ட சிறிது நேரத்தில் தாயும் உயிரிழந்தார்.
மருத்துவர் மது அருந்தியிருந்தாரா என்பதை கண்டறிய செய்யப்பட்ட சோதனையில் அவர் குடிபோதையில் இருந்தது உறுதியானது என போலீஸார் தெரிவித்தனர்.
கவனமின்மையால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டதா அல்லது பிற மருத்துவ காரணங்களால் ஏற்பட்டதா என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
மருத்துவர் லக்கானி ஓர் அனுபவமிக்க மூத்த மருத்துவர். மேலும் அரசாங்கத்தால் நடத்தப்படும் சோனாவால மருத்துவமனையில் கடந்த 15 வருடங்களாக பணியாற்றி வருகிறார்.
உயிரிழந்த காமினி சாச்சி பிரசவ வலியுடன் திங்களன்று மாலை மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.
மருத்துவமனையில் அந்த பெண்ணின் குடும்பத்தினரிடம் குழந்தை இறந்ததாகவும், பின் தாய்க்கு அதிகபடியான ரத்த போக்கு ஏற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
பின்னர், அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல குடும்பத்தினர் முடிவு செய்தனர் ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.
தாயும், சேயும் உயிரிழந்தது தெரிந்தவுடன் குடும்பத்தினர் தன்னை தாக்கக்கூடும் என்ற அச்சத்தில் மருத்துவர் லக்கானி போலீஸாரை அழைத்துள்ளார்.
"நாங்கள் வந்து பார்த்தபோது மருத்துவர் குடிபோதையில் இருந்தார். எனவே நாங்கள் அவரை கைது செய்தோம்" என போலீஸார் பிபிசி குஜராத்தி சேவையிடம் தெரிவித்தனர்.
இதுகுறித்து மேலும் விசாரிக்க அந்த மருத்துவமனை, குழு ஒன்றை அமைத்துள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்