You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உறிஞ்சப்பட வேண்டுமா நிலத்தடி நீர்? - போராட்டமும், சமூக ஊடக கருத்தும்
நிலத்தடி நீரை உறிஞ்சக்கூடாது என்ற நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்யக் கோரி தண்ணீர் லாரி உரிமையாளர்கள், கேன் நீர் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தினர்.
இது தொடர்பாக, "குடிநீர்த் தேவைக்காக நீக்குப்போக்காக இருக்கவேண்டுமா?, நிலத்தடிநீர் பாதுகாப்பில் கறாராக இருப்பது அவசியமா?" என நேற்றைய வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம். அதற்கு நேயர்கள் தெரிவித்த கருத்துகள் இங்கே.
"பணம் இருந்தால் போதும் என்று நினைத்து இயற்கை எனும் பொன்முட்டை இடும் வாத்தை கொன்ற கதையாக கொள்ளையடிக்கும் கும்பலுக்கு புரிய வைக்க இது போன்ற நெருக்கடி வரத்தான் வேண்டும்." என்று ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்திருக்கிறார் ராஜேந்திரன் உத்திரபதி.
மனோகரன், "நிலத்தடி நீரோ, ஆற்று நீரோ. மக்களுக்கு தண்ணீர் தடையில்லாமல் கொடுக்க வேண்டியது ஒரு அரசின் கடமை. அரசாங்கமும் சப்ளை செய்யாது, ஆற்றிலும் தண்ணீர் கிடையாது, ஒரு குளம் கூட பாராமரிப்பது கிடையாது. சாராயம் விற்பதிலும், கமிஷன் வாங்குவதிலும் தான் இந்த அரசு குறியாக இருக்கிறது." என்கிறார்.
"அனாவசயமான சாராயத்தை அரசு எடுத்து நடத்தும் போது மக்களின் அத்யாவசிய தேவையான தண்ணீர் சுத்திகரிப்பையும் அரசே ஏற்று நடத்த வேண்டும். அரசிடம் லிட்டர் இரண்டு ருபாய்க்கு தண்ணிர் வாங்கி செலவு மூன்று ரூபாய் பாக்கி லிட்டருக்கு பதினைந்து ருபாய் லாபம் பார்க்கும் மினரல் வாட்டர் கம்பெனிகளையும் அரசே எடுத்து நடத்தினால் அரசுக்கு வருவாய் கிடைக்கும்" என்பது தமிழன் முகமது சித்திக்கின் கருத்து.
அனிஸ் அகமது, "இன்றைய என்னுடைய தேவை பூர்த்தியானால் போதும் என்ற நினைப்பின் ஒரு பகுதியே நிலத்தடி நீர் பயன்பாடு. வேறு வழியில்லாமல் மக்கள் இந்த இழி நிலையை தேர்ந்தெடுக்கத் தள்ளிய பெருமை ஆட்சியாளர்களை சாரும். மழை நீரை சேகரித்து வைப்பதில் இன்னும் கவனம் செலுத்தாமல் இருப்பது சிறிய உதாரணம்." என்கிறார்.
அரபு நாட்டில் உள்ளது போன்று காற்றில் இருந்து தண்ணீரை பிரித்தெடுக்கும் இயந்திரம் வரவேண்டும் என்கிறார் வெங்கடகிருஷ்ணன்.
மணிகண்டன், "இவர்கள் நிலத்தடிநீர் மாஃபியாக்கள்.இவர்களுக்கு கருணை காட்டினால் குடிக்க கூட தண்ணீர் கிடைக்காது. ரியல் எஸ்டேட் மாஃபியாக்களால் நீர்நிலைகளில் உள்ள தண்ணீர் தான் கிடைக்கவில்லை, நிலத்தடிநீர் விவகாரத்திலாவது அரசு கடுமையாக நடந்து கொள்ள வேண்டும்." என்கிறார்.
பிற செய்திகள்:
- சபரிமலை: கல்வீச்சு, தடியடி- தீவிரமடையும் போராட்டம்
- செளதி அரேபியா - அமெரிக்கா முரண்: எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும்?
- ஐம்பொன் சிலையில் தங்கம் எவ்வளவு? சோமாஸ்கந்தர் சிலை வழக்கின் பின்னணி என்ன?
- பாகிஸ்தான் சிறுமி வல்லுறவு-கொலை: தூக்கிலிடப்பட்டார் குற்றம்சாட்டப்பட்டவர்
- #MeeToo விவகாரம் - இலங்கையில் சர்ச்சைக்குள்ளான பாரதிராஜாவின் பேச்சு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்