You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
எஸ்.சி, எஸ்.டி பதவி உயர்வில் இட ஒதுக்கீடு: உச்ச நீதிமன்றம் கூறியது என்ன?
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்புகளைச் சேர்ந்த அரசுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கும்போது அந்த சமூகங்கள் சமூக ரீதியில் பின்தங்கியுள்ளனவா என்பது குறித்து ஆய்வுகள் செய்யத் தேவையில்லை என்று புதன்கிழமை அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
அரசால் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினர் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலே போதும் என்று மத்திய அரசு கூறியதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
'நாகராஜ் வழக்கு' என்று பரவலாக அறியப்பட்ட வழக்கில் கடந்த 2006ஆம் ஆண்டு ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அவை வழங்கிய தீர்ப்பில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்புகளின் பின்தங்கிய நிலை, அந்த இரு சமூகங்களையும் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு மேலதிகாரிகள் பொறுப்பில் உள்ள பிரதிநித்துவம் மற்றும் நிர்வாகத் திறமை ஆகியவற்றின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மறு ஆய்வு மனு தாக்கல் செய்திருந்தது. ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அவை இதனை விசாரித்து, அந்த இரு சமூகங்களின் மக்கள்தொகை அடிப்படையிலேயே பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று அரசு கோரியிருந்தது.
அதை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு நாகராஜ் வழக்கின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யத் தேவை இல்லை என்று தீர்ப்பளித்துள்ளது.
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின அலுவலர்களுக்கு உயர் பொறுப்புகளில் போதிய பிரதிநிதித்துவம் வழங்குதல் மற்றும் நிர்வாகத் திறமை ஆகியவற்றை மாற்றுவது குறித்து நீதிபதிகள் எதுவும் தெரிவிக்கவில்லை.
வருமானத்தின் அடிப்படியில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின சமூகத்தினருக்கும் கிரீமி லேயர் (Creamy Layer) பொருந்தும் என்றும் அதை அமல்படுத்துவதா வேண்டாமா என்பது குறித்து நாடாளுமன்றமே முடிவெடுக்கலாம் என்றும் இந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
- ஐ.நா.வில் டிரம்ப்: "லட்சக்கணக்கான மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளது இந்தியா"
- கடலில் 49 நாள்கள் திக்குதெரியாமல் தவித்து உயிர்பிழைத்த 19 வயது இளைஞரின் கதை
- ஸ்வீடன் நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி: பதவி இழக்கிறார் பிரதமர்
- நடிகர் ராஜ்குமார் கடத்தல்: வீரப்பன் கூட்டாளிகள் என சந்தேகிக்கப்பட்ட 9 பேரும் விடுதலை ஏன்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்