நான் தலைமறைவாக இல்லை; தனிப்படைகள் குறித்து எனக்குத் தெரியாது - எச். ராஜா
முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
தி இந்து தமிழ்: என்னை பிடிக்க தனிப்படையா? - எச். ராஜா

பட மூலாதாரம், HRAJABJP
"நான் தலைமறைவாக இல்லை, என்னைப் பிடிக்க 2 போலீஸ் தனிப்படைகள் அமைக்கப்பட்டிருப்பது குறித்து எனக்குத் தெரியாது" என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்தார் என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.
என் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை சட்டப்படி சந்திப்பேன். இது ஒரு விதத்தில் எனக்கு மகிழ்ச்சிதான். என் மீது போடப் பட்டுள்ள வழக்குகளால், அறநிலையத் துறையில் நடந்துள்ள ஊழல் மக்களுக்கு தெரியவரும். நான் தலைமறைவாக இல்லை. என்னைப் பிடிக்க 2 போலீஸ் தனிப்படை அமைத்து இருப்பது எனக்குத் தெரியாது. வழக்கு இருப்பதால் இதற்குமேல் எதுவும் சொல்ல விரும்பவில்லை என்று அவர் கூறியதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

தி இந்து தமிழ் வெளியிட்டுள்ள கார்டூன்

பட மூலாதாரம், THE HINDU TAMIL

இந்நிலையில், பா.ஜ.க தேசிய செயலர் ஹெச்.ராஜா மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் கருணாஸ் ஆகியோரது விவகாரத்தில் சட்டம் தனது கடமையை செய்யும் என தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாதி தெரிவித்துள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
பொது வாழ்வுக்கு வந்துவிட்டால் எப்படி நாகரீகமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை சிலர் கடைகிடிப்பதில்லை என்று விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்தார். மேலும், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தொடர்ந்து தமிழக அரசு மீது குற்றச்சாட்டுகளைக் கூறி வருவது, மக்கள் தங்களை மறந்துவிடக் கூடாது என்பதற்காக என்றும், உண்மையில் ஊழல் குற்றச்சாட்டுகள் அவர் மீதுதான் உள்ளது என்றும் முதல்வர் பழனிசாமி கூறியதாக அச்செய்தி விவரிக்கிறது.

தினமலர்: ஜலந்தர் ஆயரை காவலில் எடுக்க உத்தரவு

கேரளாவில் கன்னியாஸ்திரி ஒருவரால் பாரியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஆயர் பிரான்கோ முலக்காலின் ஜாமிக் மனுவை நிராகரித்து, அவரை இரண்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறைக்கு கேரள நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கு முன்னதாக போலீஸ் விசாரணையில் ஆஜரான முலக்கால், தான் எந்த தவறும் செய்யவில்லை என தகவல்கள் வெளியானது. மூன்று நாள் விசாரணைக்கு பின்னர் எர்ணாகுளத்தில் கைது செய்யப்பட்டார். கோட்டையம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது நெஞ்சு வலிப்பதாக அவர் கூறினார். மருத்துவமனையில் சில மணி நேர சிகிச்சைக்கு பிறகு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு கோட்டையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக மேலும் அச்செய்தி விவரிக்கிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












