சுதந்திர தின விழாவில் பாரதியின் கவிதையை மேற்கோள் காட்டிய பிரதமர் மோதி
கடந்த 2 ஆண்டுகளில் 5 கோடி பேர் வறுமை கோட்டிற்கு மேல் வந்துள்ளனர் என்று பிரதமர் நரேந்திர மோதி சுதந்திர தின உரையில் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், BJP/Twitter
72 வது சுதந்திர தினத்தையொட்டி சரியாக 7.30 மணிக்கு டெல்லியில் உள்ள செங்கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றினார் பிரதமர் மோதி.

பட மூலாதாரம், BJP/Twitter
உலகிலேயே 6 வது மிகப்பெரிய பொருளாதாரம் இந்திய பொருளாதாரம் என்றும், வரி செலுத்துவோரின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்து இருக்கிறது என்றும் பிரதமர் கூறினார்.

பட மூலாதாரம், BJP/Twitter
இந்த நிகழ்வில் மோதி, மாகவி சுப்ரமணிய பாரதியின்,'எல்லோரும் அமர நிலை எய்தும் நன்முறையை இந்தியா உலகிற்கு அளிக்கும் ' என்ற கவிதையை மேற்கோள் காட்டினார்.
மோதியின் இந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் இதுதான் கடைசி சுதந்திர தின உரை.
ஐ. என். எஸ் தாரணி அணியை வாழ்த்தி தனது உரையை தொடங்கிய பிரதமர் மோதி. பின் ஜாலியன் வாலாபாக் படுகொலையில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
கடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் சமூகநீதியில் கவனம் செலுத்தியதாக தனது உரையில் குறிப்பிட்டார் பிரதமர் மோதி.
ஆயுஷ்மான் பாரத் - தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோதி.
நியாயமாக வரி செலுத்துவோருக்கு நன்றி தெரிவித்த பிரதமர், அவர்களாலேயே இங்கு பல திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாக தெரிவித்தார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் பருவமழை நன்றாக பெய்துள்ளதாக கூறிய மோதி, "சில பகுதிகள் வெள்ளத்தால் மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. என் எண்ணம் முழுவதும் வெள்ளத்தால் மரணித்த மக்களை சுற்றியே உள்ளது" என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பாரதிய ஜனதா கட்சி தலைவர் அமித் ஷா, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மஹாஜன், மற்றும் எல்.கே. அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் கலந்துக் கொண்டனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












