You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அம்மாவின் ஆசையை நிறைவேற்றிய பெண் விமானி, குவியும் வாழ்த்துகள்
எல்லா பெற்றோர்களுக்கும் தன் பிள்ளைகள் குறித்து ஏதாவது ஒரு கனவு இருக்கும்தானே? அப்படிதான் விமான பணிப்பெண்ணாக இருந்த பூஜா சின்சான்கருக்கும் ஒரு கனவு இருந்தது.
ஏறத்தாழ 38 ஆண்டுகள் விமானத்தில் பணிப்பெண்ணாக புரிந்து விட்டோம், பணியிலிருந்து ஓய்வு பெறும் அந்நாளில், நாம் பணியாற்றும் ஏர் இந்தியா விமானத்தில் தன் மகள் விமானியாக இருந்தால் எப்ப்டி இருக்கும் என்ற கனவுதான் அது. அந்தக் கனவை நிறவிவேற்றி இருக்கிறார் அவரது மகள் அஸ்ரிதா சின்சான்கர்.
பிபிசியிடம் பேசிய அஸ்ரிதா சின்சான்கர், "எனக்கு மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் இருக்கிறது. என் மகிழ்ச்சிக்கு காரணம் மக்கள் என் உணர்வுகளை புரிந்து கொண்டார்கள். உற்சாகத்திற்கு காரணம் அவர்கள் இதனை கொண்டாடுகிறார்கள்" என்றார்.
முன்னதாக பூஜா தனது ட்விட்டர் கணக்கில், "என் அம்மா தான் விமானப் பெண்ணாக பணிபுரியும் கடைசி நாளில், அந்த விமானத்தை நான் இயக்க வேண்டும் என்று விரும்பினார். நான் அந்த விமானத்தைன் இயக்கப் போவது மகிழ்ச்சி அளிக்கிறது" என்ற தொனியில் ட்வீட் செய்திருந்தார்.
செவ்வாய்க்கிழமை பகிரப்பட்ட அந்த ட்வீட்டானது இதுவரை 14 ஆயிரம் லைக்குகளையும், 3119 கமெண்டுகளையும். 2500-க்கும் மேற்பட்ட ரீட்வீட்டுகளையும் இதுவரை பெற்று இருக்கிறது.
பிரபலங்கள், அமைச்சர்கள் மற்றும் சாமானிய மக்கள் என சமூகத்தின் பல்வேறு தரப்பினரும் தங்கள் வாழ்த்துகளை பகிர்ந்துள்ளனர்.
வாழ்த்து மழை
ஏர் இந்தியா "பாரம்பரியம் தொடரட்டும்" என்று ட்வீட் செய்திருந்தது.
முன்னாள் அமைச்சரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான பிரஃபுல் படேல், "நிஜ வாழ்வில் நடந்த அற்புதமான கதை"என்று ட்வீட் செய்திருக்கிறார்.
இதுபோல பலர் உணர்வுபூர்வமாக இந்த விஷயத்தை அணுகி பின்னூட்டம் இட்டு இருக்கிறார்கள், ரீட்வீட் செய்திருக்கிறாகள்.
இலக்கற்ற பயணம்
அஸ்ரிதா சின்சான்கர், "எந்த முன் திட்டமும் இல்லாத பயணம் பெரும் மகிழ்வை தரும் அல்லவா. என் அம்மா அடுத்த இரண்டு மாதங்களுக்கு அப்படியான ஒரு பயணம் செய்ய இருக்கிறார். அதன்பின் தான், அடுத்த என்ன என்பது குறித்து முடிவு செய்வார்." என்கிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :