வாதம் விவாதம்: இந்திய மக்கள் இதயத்தில் இருந்ததை பேசினாரா ராகுல் காந்தி?
பிரான்ஸ் கால்பந்து அணியைப்போல் மோதி வெற்றி பெற்றாலும் குரேஷியாவை போன்று ராகுல் மக்களின் மனதில் இடம் பிடித்துவிட்டார் என்று பாரதிய ஜனதாவின் கூட்டணிக் கட்சியான சிவ சேனா கூறியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
"சிவசேனாவின் இந்த ஒப்பீடு ஏற்றுக் கொள்ளக் கூடியதா? இது அரசியல் வேறுபாடுகளால் கூறப்பட்ட கருத்தா?" என்று பிபிசி தமிழின் #வாதம்விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.
அதற்கு நேயர்கள் பதிவிட்ட கருத்துகளை தொகுத்து வழங்குகிறோம்.
"ராகுலின் உள்ளத்தில் இருந்து வந்த ஒவ்வொரு வார்த்தையும் இந்திய மக்கள் இதயத்தில் இருந்தவை. மக்களின் மனதை அறிந்து பேச வேண்டும் என்றால் மக்களோடு களத்தில் பயனித்தால் மட்டுமே உணர முடியும். உங்கள் அயராத உழைப்புக்கு கிடைத்த மதிப்பாக நான் பார்க்கிறேன்," என்கிறார் சையது அலி எனும் பிபிசி தமிழ் நேயர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
"அருமையான உவமை. எதிரியை பாராட்டவும் ஒரு மனம் வேண்டும். கண்டிப்பாக ஏற்றுகொள்ளக் கூடியது," என்று பதிவிட்டுள்ளார் சுப்பு லட்சுமி.

தமிழன் முகமது சித்திக் எனும் ஃபேஸ்புக் பதிவர், "ராகுலின் இத்தனை வருட அரசியல் பயணத்தில் நேற்று தான் ஒரு சிறந்த எதிர்கட்சி தலைவராக பேசியுள்ளார். பாராட்டுக்கள்," என்று கூறியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
"மக்கள் மனதை வென்று விட்டார் என்பதை விட... ஒரு தரமான மக்கள் தலைவராக... மக்கள் மனதில் நம்பிக்கையை விதைத்திருக்கிறார்," என்கிறார் ஆசிக் அலி
"அவர்கள் எந்த நோக்கத்தில் சொல்லியிருந்தாலும் கருத்து ஏற்றுக்கொள்ளக்கூடியதே," என்று கூறியுள்ளார் நந்த குமார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்