You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஒரே நேரத்தில் தேர்தல்: 'செலவு குறையும்.. ஆனால், ஜனநாயகத்திற்கு விரோதமானது'
நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த மாநிலங்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப் பிரதமர் மோதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில், ''ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால் செலவினங்கள் குறையுமா? அல்லது இது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரான நிலைப்பாடா?'' என நேற்றைய வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.
இதற்கு நேயர்கள் தெரிவித்த கருத்துக்கள் இங்கே.
''இது நாட்டிற்கு வரும் ஒரு வகையான அதிகார துஷ்பிரயோகம்'' என்கிறார் ஜேம்ஸ் எனும் நேயர்.
``ஒரு தொகுதியின் இடைத் தேர்தலையே குறித்த நாளில் முறைகேடுகள் இன்றி நடத்துவதற்குச் சிரமப்படும் தேர்தல் ஆணையம் எப்படி நாட்டின் ஒட்டுமொத்த தொகுதிகளுக்கும் ஆன சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலை ஒன்றாக நடத்த இயலும்? அனைத்துத் தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் உரியப் பாதுகாப்புதான் கொடுக்க முடியுமா? மாநிலங்களுக்கே உரிய பன்முகத்தன்மையை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாகத்தான் இந்தத் தேர்தல் சீர்திருத்தம் முன்வைக்கப்படுகிறதே ஒழிய செலவினங்களை குறைக்க அல்ல'' என்கிறார் சக்தி சரவணன்.
``தேர்தல் செலவினங்களை குறைக்கும் நடவடிக்கை வரவேற்க வேண்டியது .இவ்வாறு செய்வதற்கு முன் பல கேள்விகளுக்கு விடை தேட வேண்டி உள்ளது.`` என்கிறார் முத்து செல்வம்.
``செலவினங்கள் குறையும்தான், ஆனால் அதில் பல சிக்கல்கள் உள்ளன. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளைக் கலைக்க வேண்டி வரும். இதனால் மக்களுக்கு எந்த லாபமும் இல்லை.இதையெல்லாம் மத்திய அரசு சமாளிக்க வேண்டும்`` என தெரிவித்துள்ளார் சரோஜா.
``இது மத்திய அரசின் சூழ்ச்சி .தாங்கள் ஆட்சிக்கு வர எந்த எல்லைவரைக்கும் போகும் செயல்`` என்கிறார் நியாஸ் கான்.
``செலவினங்கள் குறையும் மாற்றுக் கருத்தில்லை. ஜனநாயகத்திற்கு விரோதமானது. 5 வருடம் மொத்த நாடுமே மாட்டிக்கொள்ளும். அரசியல்வாதிகளுக்குப் பயம் இருக்காது `` என பதிவிட்டுள்ளார் சுப்பு லட்சுமி.
``தேவையற்ற ஒன்று.. முதலில் வாக்கு சீட்டில் தேர்தல் நடத்துங்கள்`` என்கிறார் சாமுவேல்.
``நீங்கள் ஆட்சி நடத்தும் எல்லா மாநில ஆட்சியையும் ஒரே நேரத்தில் கலைப்பீர்களா? இல்லைதானே. பிறகு ஏன் இந்த விளம்பரம்'' என கேட்டுள்ளார் பரூக் பாஷா.
``ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது அரசியல் பணப் பரிவர்த்தனைக்கு மட்டுமே பயன்படும் மக்களுக்கு பயனளிக்காது. இது ஜனநாயகத்திற்கு எதிரானது`` என்கிறார் ரவி
''சர்வாதிகாரத்தை நோக்கி'' என பதிவிட்டுள்ளார் கனகராஜன்.
`` யானை தன்தலையில் மட்டுமல்லாமல் அடுத்தவர் தலையிலும் மண்ணைப் போடப்போகிறது`` என்கிறார் முரளி.
``ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சரியான முடிவே`` என்கிறார் கன் டி எனும் பெயரில் இயங்கும் நேயர்.
``ஒரே நேரத்தில் தேர்தலினால் பல முறைகேடுகளைத் தவிர்க்கலாம்'' என்கிறார் அர்ஜுனன்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்