BBC Top 5 News: மோதியைக் கொல்ல மாவோயிஸ்ட்டுகள் சதித் திட்டம் - போலீஸ்
தேசிய மற்றும் சர்வதேச செய்திகள் அடங்கிய பிபிசி தமிழின் ஐந்து முக்கிய செய்திகளின் தொகுப்பு.
மோதியைக் கொல்ல மாவோயிஸ்ட்டுகள் சதித் திட்டம்: போலீஸ்

பட மூலாதாரம், Getty Images
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்டது போல, பிரதமர் மோதியையும் கொலை செய்ய மாவோயிஸ்ட்டுகள் சதித் திட்டம் தீட்டியதாக மகாராஷ்டிராவின் பூனே போலீஸார் நீதிமன்றத்தில் ஒரு கடிதத்தை தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில், பிரதமரின் பாதுகாப்பு விஷயத்தை மத்திய அரசு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுகிறது என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
தூத்துக்குடி: 11 பேர் பணியிட மாற்றம்

பட மூலாதாரம், Getty Images
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்நிலையில், துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு உத்தரவிட்ட ஒரு வட்டாட்சியர், இரண்டு துணை வட்டாட்சியர்கள் உள்ளிட்ட 11 பேரை பணியிட மாற்றம் செய்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உள்ளிரவிட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
மேட்டூர் அணை திறப்பு இல்லை - முதல்வர்

பட மூலாதாரம், DIPR
மேட்டூர் அணையில் நீர் இருப்பு இல்லாததால், வரும் ஜூன் 12ஆம் தேதியன்று குறுவை நெல் சாகுபடிக்காக தண்ணீர் திறக்க இயலாது என்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
மேலும், டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு 116 கோடி ரூபாய் செலவில் குறுவை தொகுப்பு திட்டத்தையும் அவர் அறிவித்தார்.
அமெரிக்க சிறப்பு படை வீரர் கொலை

பட மூலாதாரம், AFP
தென் கிழக்கு சோமாலியாவில், அல்-ஷபாப் தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களால் நடத்தப்பட்ட தாக்குதலில் அமெரிக்க சிறப்பு படை வீரர் ஒருவர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜமாமே நகரம் அருகே பதுங்கியிருந்து நடத்தியது போல தெரிந்த இத்தாக்குதலில் மேலும் 4 அமெரிக்க ராணுவ வீரர்கள் மற்றும் ஒரு சோமாலியா வீரரும் காயமடைந்ததாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் கூறினர்.
ஜி7: ரஷ்யாவை மீண்டும் இணைக்கக் கோரும் டிரம்ப்

பட மூலாதாரம், EPA
முக்கிய தொழில்வள நாடுகளின் ஜி7 குழு நாடுகளின் உச்சி மாநாட்டில் ரஷ்யாவும் பங்கேற்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.
2014ம் ஆண்டு கிரிமியாவை ரஷ்யாவோடு இணைந்து கொண்டதை தொடர்ந்து ரஷ்யா இந்த அமைப்பில் இருந்து நீக்கப்பட்டது. ஆனால், ரஷ்யா இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்க விரும்புவதாக அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.












