‘துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவிட்டது யார்?’ - நிருபர்; ‘இப்போது சொல்லமுடியாது’ - ஆட்சியர்
தூத்துக்குடியின் புதிய மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற சந்தீப் நந்தூரி நிருபர்களிடம் துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவிட்டது யார் என்று இப்போது சொல்ல முடியாது என்று தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த என். வெங்கடேஷ் இடமாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த சந்தீப் நந்தூரி நேற்று நியமிக்கப்பட்டார்.
இன்று பொறுப்பேற்ற அவர் நிருபர்களை சந்தித்து, அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
சந்தீப் நந்தூரியிடம் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடந்த உத்தரவிட்டது யார் என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இது குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள விசாரணை கமிஷனிடம்தான் துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவிட்டது யார் என்று சொல்ல முடியும் என்றார் அவர்.
இப்போது மாவட்ட நிர்வாகத்தின் கவனம் முழுவதும், மாவட்டத்தின் இயல்பு நிலையை மீட்பதிலும், அமைதியை நிலைநாட்டுவதிலும்தான் இருக்கிறது என்றார்.
மேலும் அவர், பால் உள்ளிட்ட அத்யாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது என்றார்.
உண்மையான தகவல்களை மக்களிடம் சேர்க்க இனி தினமும் மாலை நேரத்தில் நிருபர்களை சந்திப்பதாகவும் அவர் கூறினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












