You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கர்நாடகா: முடியும் தருவாயில் சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு
கர்நாடகாவில் பொறுப்பேற்றுள்ள எடியூரப்பா தலைமையிலான பாரதிய ஜனதா மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மாலை நடைபெறவுள்ள நிலையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 222 சட்டமன்ற உறுப்பினர்களின் பதவியேற்பு முடிவடையவுள்ளது.
அவர்களுக்கு இடைக்கால சபாநாயகர் கே.ஜி போபையா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். எடியூரப்பா, சித்தராமையா ஆகியோர் சட்டமன்ற உறுப்பினர்களாக பதவி ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இன்று காலை, கர்நாடக சட்டப்பேரவையில்,கே.ஜி போபையா இடைக்கால சபாநாயகராக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் தொடுத்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.
எனவே கே.ஜி.போப்பையா தொடர்ந்து இடைக்கால சபாநாயகராக நீடிப்பார் என்றும் நம்பிக்கை வாக்கெடுப்பை அவர் நடத்துவார் என்றும் உறுதியாகிறது.
கே.ஜி.போபையாவை சபாநாயகராக நியமித்ததற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் சார்பாக வாதாடிய கபில் சிபில் கே.ஜி.போபையா நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தக கூடாது என வாதாடினார்.
மூத்த சட்ட மன்ற உறுப்பினரை தான் சபாநாயகராக நியமிக்க வேண்டும். இதே போன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் போப்பையா ஏற்கனவே பாரப்பட்சமாக நடந்து கொண்டார் என்றும் கபில் சிபில் தெரிவித்தார்.
மூத்த சட்டமன்ற உறுப்பினரை இடைக்கால சபாநாயகராக நியமிக்க வேண்டும் என்பது நடைமுறையே தவிர அது சட்டத்தில் குறிப்பிடவில்லை என்று உச்சநீதிமன்றம் பதல் அளித்தது.
மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பு நேரலை செய்யப்படுவது மூலம் வெளிப்படைத்தன்மையை நிலைநாட்டலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
காங்கிரஸின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததன் மூலம் இந்த நாளில் தங்களுக்கு முதல் வெற்றி கிடைத்துள்ளதாக கர்நாடக பாஜகவின் டிவிட்டர் பதவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கர்நாடக சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு மாலை 4 மணியளவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேறொரு சபாநாயகரை தேர்வு செய்ய வேண்டுமென்றால் தற்போதைய சபாநாயகருக்கு நோட்டீஸ் வழங்க வேண்டும் எனவே நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெறாமல் போகும் என உச்சநீதிமன்ற தெரிவித்தது. எனவே நம்பிக்கை வாக்கெடுப்பை ஒத்தி வைக்க விரும்பாத காங்கிரஸ் வாக்கெடுப்பில் நம்பிக்கைத் தன்மை வேண்டுமென்று கோரியதாக கபில் சிபில் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்