வாரணாசி: மேம்பாலம் சரிந்து விழுந்ததில் 18 பேர் பலி

முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான கட்டுரைகள் மற்றும் பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் - வாரணாசி விபத்தில் 18 பேர் பலி

Varanasi

பட மூலாதாரம், AFP

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் கட்டப்பட்டுவரும் மேம்பாலம் ஒன்றின் ஒரு பகுதி சரிந்து விழுந்ததில் 18 பேர் உயிரிழந்தனர்.

அந்த மேம்பாலத்தின் இரு தூண்கள் சாய்ந்ததால் இந்த விபத்து நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Presentational grey line

தி இந்து (ஆங்கிலம்) - தோல்வியைச் சந்தித்த அமைச்சர்கள்

சித்தராமையா

பட மூலாதாரம், Getty Images

நடந்து முடிந்துள்ள கர்நாடக சட்டமன்றத் தேர்தலில், சித்தராமையா தலைமையிலான அமைச்சரவையில் அங்கம் வகித்த 16 பேர் தோல்வியைச் சந்தித்துள்ளனர்.

காங்கிரஸ் அமைச்சரவையில் 15 அமைச்சர்கள் தங்கள் தொகுதிகளைத் தக்கவைத்துள்ளனர்.

Presentational grey line

தினமணி - தாஜ் மஹாலுக்கு ஆபத்து

தாஜ் மஹால்

பட மூலாதாரம், Getty Images

வடமாநிலங்களில் வீசிய புழுதிப்புயலால் தாஜ் மஹாலுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தினமணி தலையங்கம் எழுதியுள்ளது.

நினைவுச் சின்னங்கள் பராமரிக்கப்படாமல் இருப்பதற்கு தொல்லியல் ஆய்வுத் துறையை மட்டும் குற்றம் சொல்வது நியாயமில்லை என்றும் மத்திய, மாநில அரசுகளின் அக்கறையின்மையே முக்கியக் காரணம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

Presentational grey line

தினத்தந்தி - மே 29 முதல் சட்டமன்ற கூட்டம்

தமிழக சட்டமன்றத்தின் கூட்டம் இம்மாதம் 29ஆம் தேதி கூடுகிறது. தமிழக அரசுத் துறைகள் மானிய கோரிக்கைகள் மீது இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

Presentational grey line

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: