You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நாளிதழ்களில் இன்று : கர்நாடகா தேர்தல் முடிந்தது - தமிழகத்துக்கு உரிய தண்ணீர் கிடைக்குமா?
முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று (சனிக்கிழமை) வெளியான கட்டுரைகள் மற்றும் பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.
கர்நாடகா தேர்தல் முடிந்தது - தமிழகத்துக்கு உரிய தண்ணீர் கிடைக்குமா?
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவு திட்டம் நாளை (திங்கள்கிழமை) தாக்கல் செய்யப்படும் என்ற நம்பிக்கையில் தமிழக அரசு உள்ளதாக தினமலர் நாளிதழ் முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.
கர்நாடகா சட்டசபை தேர்தல் முடிவடைந்ததால் இனியும் இந்த விவகாரத்தில் மத்திய அரசு காலம் கடத்தாது என்று எதிர்ப்பார்க்கப்படுவதாக அச்செய்தி கூறுகிறது.
தமிழகத்திற்கு காவிரியில் இருந்து உரிய தண்ணீர் திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிடும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக, நீதிமன்ற உத்தரவின்படி மே 14ஆம் தேதி காவிரி வரைவு திட்டம் தாக்கல் செய்யப்படும் என்றும் கால அவகாசம் கேட்கப்பட மாட்டாது என்று மத்திய நீர்வளத்துறை செயலர் யு.பி. சிங் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில் வரைவு செயல் திட்டத்தில் உள்ள சாதக, பாதக அம்சங்களை அறிந்த பின் அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள தமிழக அரசு முடிவு செய்துள்ளதான மேலும் அச்செய்தி விவரிக்கிறது.
தினமணி : கடத்தல் வழக்கு பதிவு செய்ய வேண்டும்
சிறுவர், சிறுமியர் காணாமல் போனால் கடத்தல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகளுக்கு டி.ஜி.பி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் உடல் உறுப்புக்காகவும், பாலியல் தொழில் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காகவும் கடத்தல் கும்பல் சிறுவர், சிறமியரை அதகளவில் கடத்துவதாக புகார் எழுந்துள்ளது.
சிறுவர், சிறுமியர் கடத்தப்படும் நிலையில், அவர்கள் காணாமல் போனதாகவே காவல்துறையினரால் வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. இவ்வாறு செய்தால், விசாரணையில் போலீஸார் ஆர்வம் காட்டாமல் கிடப்பில் போடுவதற்கு வசதியாக இருப்பதாக குழந்தைகள் நல ஆர்வலர்கள் கூறி வந்தனர்.
சிறுவர், சிறுமியர் கடத்தல் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 18 வயதுக்குட்பட்டவர்கள் காணவில்லை என்று புகார் வந்தால் அதனை பெறும் போலீஸார் காணவில்லை என்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக் கூடாது என்றும் அப்புகாரில் கடத்தப்பட்டதாக குறிப்பிட்டிருந்தால் கடத்தல் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்த உத்தரவை அமல்படுத்தும் வகையில், தமிழக டி.ஜி.பி இவ்வாறு சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக மேலும் அச்செய்தி விவரிக்கிறது.
தி இந்து (ஆங்கிலம்) : தஞ்சாவூரில் திறந்தவெளி சிறை
தஞ்சாவூரில் திருமலைசுந்திரம் என்ற பகுதியில் 58.17 ஏக்கர் நிலத்தில் தறந்த வெளி சிறை அமைக்கும் திட்டத்தை தமிழக சிறைத்துறை செயல்படுத்த உள்ளதாக தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நிலத்தின் ஒரு பகுதி சாஸ்த்ரா பல்கலைகழக்கத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள கட்டடங்களை இடிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியருக்கு சிறைத்துறை கடிதம் எழுத திட்டமிட்டுள்ளதாக சில அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆயுள் தண்டனை பெற்று 7 ஆண்டுகள் முடிந்த கைதிகள், மீதமுள்ள ஆண்டுகளை இந்த திறந்த வெளி சிறையில், முற்றிலும் மாறுபட்ட சூழலில் வாழ இங்கு மாற்றப்படுவர் என்று அச்செய்தி விவரிக்கிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: