வில், அம்புடன் நாடாளுமன்றம் வந்த ஆந்திர எம்.பி

ஆந்திரப் பிரதேச மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கோரி போராட்டம் நடத்தும் தெலுங்கு தேசக் கட்சியின் எம்.பி ஷிவ் பிரசாத் வித்தியாசமான போராட்டத்தில் இறங்கியுள்ளார். போராட்டத்தின்போது அவரது பத்து வித்தியாசமான தோற்றங்கள்.

கெட்டப்பை அடிக்கடி மாற்றிக் கொண்டு தினந்தோறும் ஒரு அவதாரம் எடுத்து தனது எதிர்ப்பை தெரிவிக்கிறார்.

டி.டி.பி கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான ஷிவ் பிரசாத், ஆந்திர பிரதேசத்தின் சித்தூர் நாடாளுமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

மருத்துவ பட்டம் பெற்று மருத்துவப் பணியில் ஈடுபட்டிருக்கிறார் டாக்டர் ஷிவ் பிரசாத்.

தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்திருக்கும் ஷிவ் பிரசாத் 2005ஆம் ஆண்டின் தெலுங்கு திரைப்படங்களில் சிறந்த நடிகர் என்ற 'நந்தி' விருதையும் பெற்றிருக்கிறார்.

வித்தியாசமான கெட்டப்புகள் அணிவதற்காக ஏற்கனவே பிரபலமானவர் ஷிவ் பிரசாத்.

ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி நடைபெறும் போராட்டத்தில் வித்தியாசமான உடையணிந்து அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறார் ஷிவ் பிரசாத்.

ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்ட சமயத்தில், அதை எதிர்த்து நடைபெற்ற போராட்டங்களிலும் வித்தியசமான வேடங்களில் தோன்றி எதிர்ப்பை பதிவு செய்தார் ஷிவ் பிரசாத்.

ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கப்படாவிட்டால், நாடாளுமன்றத்தின் அடுத்தக் கூட்டத்தொடரிலும் போராட்டத்தை தொடரப்போவதாக ஷிவ் பிரசாத் கூறுகிறார்.

தெருவில் வித்தைக் காட்டும் வித்தைக்காரராக ஷிவ் பிரசாத்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: