வாதம் விவாதம்: ”ஃபேஸ்புக்கிலிருந்து வெளியேறுவது தீர்வாகாது”

ஃபேஸ்புக் பயனாளிகளின் தகவல்கள் தேர்தலுக்காக தவறாக பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை அடிப்படையாக வைத்து பிபிசி தமிழின் வாதம் விவாதம் பகுதியில், சமூக ஊடகங்களில் அந்தரங்க தகவல்களை பகிர்வதில் கவனம் தேவையா? ஃபேஸ்புக்கிலிருந்து வெளியேறுவதுதான் தகவல்களை காப்பதற்கான தீர்வா? என்று கேட்டிருந்தோம்.

இதற்கு பிபிசி தமிழ் நேயர்கள் தெரிவித்த கருத்துக்களை இங்கே தொகுத்து வழங்குகின்றோம்.

ஃபேஸ்புக்கிலிருந்து வெளியேறினாலும் கூகுளில் நமது அனைத்து நடவடிக்கைகளையும் சேமித்து வைக்கப்படுகிறது. இவைகளிடமிருந்து நாம் தப்புவதற்கு ஒரே வழி இண்டர்நெட் பயன்படுத்துவதை குறைப்பதே ஆகும் என்று ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்து இருக்கிறார் அபுல் கலாம் ஆஸாத்.

"ஃபேஸ்புக்கிலிருந்து வெளியேறுவது தீர்வாகாது. எல்லா கண்டு பிடிப்புகளிலும் கையாள்வதில் ஆபத்து உள்ளது. ஃபேஸ்புக்கையும் கவனத்துடன் கையாண்டால் நமக்கு நன்மையே." என்கிறார் பாலன் சக்தி

"இங்கு என்ன அந்தரங்கம் பதிவு செய்யப்படுகிறது அப்படி பதிவு செய்யப்பட்டால் அது அந்தரங்கம் இல்லையே சமூக வலை தளங்களில் குறைபாடு இல்லை எப்படி அதை கையாளுகிறோம் பயன் படுத்துகிறோம் என்பதில் தான் எல்லாமே இருக்கிறது." என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: