You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
“ரத யாத்திரைக்கு பதிலாக மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம்”
தமிழகத்தில் ராம ராஜிய ரத யாத்திரைக்கு அனுமதி அளித்துள்ளதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாடங்கள் நடத்தியுள்ளன.
இந்த ரத யாத்திரை மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கும் என்ற எதிர்க்கட்சிகளின் கூற்று சரியா?
பேரணிக்கு அனுமதி அளித்த அரசே 144 தடை உத்தரவு பிறப்பித்தது ஏன்?
இந்த கேள்விகளுக்கு சமூக வலைதளங்கள் வழியாக கருத்துக்களை பதிவிட “வாதம் விவாதம்” பகுதியில் கேட்டிருந்தோம்.
இதற்கு பிபிசி தமிழ் நேயர்கள் தெரிவித்த கருத்துக்களை இங்கே தொகுத்து வழங்குகின்றோம்.
அருண் என்கிற நேயர், யாருக்கோ ஆதரவாக இந்த அரசு செயல்பட, எதிர்கட்சிகளின் எதிர்ப்பையும் ,மக்களின் விரக்தியையும் சம்பாதித்து கொள்கிறது என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
முத்து செல்வம் என்கிற நேயர், எதிர்கட்சிகளின் கூற்று தவறானது. இராம நாமத்தை தவிர யாத்திரீகர்கள் வசம் எந்த ஆயுதமும் இல்லை. அப்படி கலவரம் நடந்துவிடும் என்றால் யாத்திரை கடந்து வந்த மாநிலங்களில் ஏன் கலவரம் நடக்கவில்லை? பிறகு எப்படி தமிழகத்தில் கலவரம் வரும். சிறுபாண்மையினர் ஓட்டுகள் போய்விட கூடாது என்பதற்காக அரசியல் செய்கிறார்கள் என்ற கருத்தை பதிவிட்டுள்ளார்,
தமிழர்களுக்கு தெரிந்த கடவுள்கள் முருகன்,பெருமாள்,மாரியம்மன் மட்டும் தான் என்பது நேயர் சதீஷின் கருத்தாகும்.
சக்தி சரவணன் என்ற நேயர், தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில், கம்பரின் கம்பராமாயணம் இல்லையேல் தமிழருக்கு ராமன் யார் என்றே தெரிந்திருக்காது அதேபோல் வலிமையான தலைமையில்ல ஆளும் இக்கட்சி ஆட்சியில் இல்லாமல் இருக்குமேயானால் இந்துத்துவ கொள்கையினரது ஆட்டம் குறைந்திருக்கும் என்ற கருத்தை பதிவிட்டுள்ளார்.
கோபி என்ற நேயர் எதிர்ப்பு முற்றிலும் தவறானது.. என்றும் இந்துக்கள் மற்ற மதத்தவரை வெறுப்பதில்லை என்கிறார்.
பைசா பிரயோஜனம் இல்லாத ரத யாத்திரைக்கு பதிலாக, பற்றி எரியும் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம் என சரோஜா பாலசுப்பிரமணியன் கூறியுள்ளார்.
மா. செ.துரை என்பவர், இது அமைதியை சீர்குலைக்கும் யாத்திரை என்கிறார்.
சீனி.சுப்பிரமணியன் என்ற நேயர் டுவிட்டர் பதிவில், வடக்கில் இருந்து அரசியல் நோக்குடன் ஆர்.எஸ்.எஸ்.மதவெறி பின்னணியில் நடக்கும் இந்த மதவெறி ஊர்வலத்துக்குத்தான் எதிர்ப்பு என்பதை தனது கருத்தாக கூறுகிறார்.
இரா.திருநாவுக்கரசு என்பவர் மத நல்லிணக்கத்திற்கு எதிரானது இந்த ரதயாத்திரை இதுதான் உண்மை என்கிறார்.
தமிழகத்தில் தேவையில்லை என்பது ராஜநீலா ரானாவின் கருத்தாகும்.
ஜெரி என்பவர் பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவில், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் ஒரு வழக்கில் இவ்வாறு ஆதரவு கோருவது தவறான செயல் என்கிறார்.
வி.விக்னேஷ் குகிள் பிளஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ள கருத்தில், மக்கள் வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை எடுக்காமல் மக்களை தூண்டிவிட்டு அதில் தங்கள் தவறுகளை மறைத்துக் கொள்ள பார்க்கிறது மத்திய அரசு என்கிறார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்