இராக்கில் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் கொல்லப்பட்டனர்: சுஷ்மா ஸ்வராஜ்

இராக்கில் ஐ.எஸ் அமைப்பால் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

செவ்வாய்க்கிழமையன்று நாடாளுமன்றத்தில் பேசிய அவர், ஐ.எஸ் குழுவால் கடத்தப்பட்ட 40 பேரில், ஹர்ஜீத் என்பவர் மட்டும் இஸ்லாம் மதத்திற்கு மாறியதால், தப்பித்ததாக தெரிவித்துள்ளார்.

இறந்தவர்கள் மரபணுவை, அவர்களின் உறவினர்களின் மரபணுவுடன் ஒப்பிட்டு பார்த்து இதை உறுதி செய்ததாக அவர் கூறியுள்ளார். உயிரிழந்தவர்களில் 31 பேர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள். நான்கு பேர் இமாச்சல பிரதேசத்தையும், மற்றவர்கள் ,மேற்கு வங்கம் மற்றும் பீகாரை சேர்ந்தவர்கள் ஆவர்.

இறந்தவர்களின் உடல், புதைக்கப்பட்ட இடத்திலிருந்து எடுக்கப்பட்டது என்று தெரிவித்த சுஷ்மா ஸ்வராஜ், அவை அனைத்தும் ஒரே குழியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

உறவினர்களின் மரபணு மாதிரிகள் நான்கு மாநிலங்களிலிருந்து பெறப்பட்டது என்றும், பின் அவை சோதனைக்கு அனுப்பப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சந்தீப் என்ற இளைஞரின் மரபணுவே முதலில் பொருந்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

டிஎன்ஏ பரிசோதனையை தவிர பெரிய ஆதாரங்கள் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :