குரங்கணி தீ விபத்து: பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு

குரங்கணி தீ விபத்து: பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு

தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 11) நடந்த தீ விபத்தில் சிக்கி, ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட சக்திகலா மற்றும் தேவி ஆகியோர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துவந்த தேவி மற்றும் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட சக்திகலா ஆகியோர் இறந்துவிட்டதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சக்திகலா மற்றும் தேவிக்கு பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டிருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

குரங்கணி தீ விபத்து: பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு

பட மூலாதாரம், Getty Images

கடந்த 14 ஆம் தேதி, கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டதால், திவ்யாவின் உடல்நிலை மோசமடைந்து உயிரிழந்தார்.

தற்போது, குரங்கணி தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

குரங்கணி மலையில் நடந்த தீவிபத்து குறித்து விரிவான அறிக்கையை அளிக்க, மூத்த ஐஏஎஸ் அதிகாரி அதுல்யா மிஸ்ராவை விசாரணை அதிகாரியாக தமிழக அரசு நியமித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :