You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கண்ணே, கலைமானே: டிவிட்டரில் கலங்கிய கமல், ரஜினி, பிரபல நடிகர்கள்
தமிழில் உதித்து, ஹிந்தியிலும் ஒளிர்ந்த பிரபல திரைப்பட நடிகை ஸ்ரீதேவி நேற்றிரவு மாரடைப்பால் காலமானார்.
துபாயில் தனது குடும்ப உறவினர் இல்லத் திருமண விழாவுக்கு சென்றிருந்தபோது அவர் இறந்ததாக அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
இந்நிலையில், ஸ்ரீதேவியின் மறைவுக்கு பல்வேறு தரப்பினர் தங்களது இரங்கலை ட்விட்டர் போன்ற சமூக இணையதளங்களின் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர்.
"என்னுடைய சிறந்த நண்பரை இழந்துவிட்டேன். திரைத்துறை ஒரு மிகச் சிறந்த திறமைசாலியை இழந்துவிட்டது" என்று நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
"மூன்றாம் பிறை படத்தின் பாட்டு காதில் ஒலிக்கிறது. இந்தக் குழந்தை கன்னி மயிலாக, கண்ணியமான மனைவியாக, பாசமிக்க தாயாக படிப்படியாய் மாறியதைப் பார்தது மகிழ்ந்தவன் நான். இதையும் நான் பார்க்க நேர்ந்தது கொடுமைதான். பாசமிகு அவர் குடும்பத்தாருக்கு என் அனுதாபங்கள்" என்று நடிகர் கமல் ஹாசன்
"இந்திய சினிமாவின் கனவு தேவதை காற்றில் கலந்தது! ஆயினும் நம் நெஞ்சில் எப்போதும் நிழலாடும்!" என்று நடிகர் விவேக் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
"ஸ்ரீதேவி மறைந்துவிட்டதை அறிந்தவுடன் அதிர்ச்சிக்குள்ளானேன்" என்று கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
"அவரிடமிருந்து நிறைய கற்றிருக்கிறேன், அவரது இழப்பை இதுவரை ஏற்றுக்கொள்ள முடியவில்லை" என்று நடிகை கஜோல் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
"ஸ்ரீதேவியின் அகால மரணத்தைப் பற்றி அறிந்தவுடன் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட வகையில் அதிர்ச்சியடைந்தேன்" என்று பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் பதிவிட்டுள்ளார்.
"இதை என்னால் நம்ப முடியவில்லை, இது உண்மையாக இருக்க வாய்ப்பில்லை. நான் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை. இது இந்திய சினிமாவின் கருப்பு தினம்" என்று நடிகை ஹன்சிகா மோத்வானி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி, "இந்த செய்தியை கேட்டு மீள முடியாத துயரத்தில் ஆழ்ந்துள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.
பாடகியான ஸ்ரேயா கோஷல், "இதை என்னால் நம்பமுடியவே இல்லை. அவர் விரைவிலேயே மறைந்துவிட்டார்" என்று கூறியுள்ளார்.
"இதுவொரு ஈடுசெய்ய முடியாத மற்றும் மறக்கவியலாத இழப்பு" என்று நடிகை கெளதமி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
"மிகவும் திறமையான மற்றும் அழகான இவரின் இழப்பை விவரிப்பதற்கு வார்த்தைகள் இல்லை" என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :