You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பயங்கரவாதத்தின் பயிற்சிக்களமாகிறது தமிழகம்: அமைச்சர் குற்றச்சாட்டு உண்மையா?
பயங்கரவாத இயக்கங்களின் பயிற்சிக்களமாக தமிழகம் மாறுவதாக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
பிபிசி தமிழின் வாதம் விவாதம் பகுதியில் 'இதுவரை இல்லாமல் திடீரென இப்படிப்பட்ட குற்றச்சாட்டை கூறுவது அரசியல் நோக்கம் கொண்டதா? அரசியல் என்று கூறி புறந்தள்ளிவிட முடியாதா?' என்ற கேள்விக்கு நேயர்களின் பதிலை தொகுத்து வழங்குகிறோம்.
"இவர் சொன்னது முற்றிலுமாக உண்மை. இதுவரை இல்லாத ஆர்எஸ்எஸ் ஊர்வலம் தமிழ்நாட்டில் நுழைந்து விட்டது," என்கிறார் வினோத் குமார்.
"தமிழகத்தில் இடத்தை பிடிக்க கலவரத்தை தூண்டுவதே இவர்களின் இலக்கு. அதற்கு தமிழகத்தில் நடந்த ஒரே அசம்பாவித சம்பவம் கோவை குண்டு வெடிப்பு. அதை பயன்படுத்துகிறார்கள்," என்கிறார் ஷேக் உதுமான் எனும் நேயர்.
"அவரிடம்தான் கேட்கவேண்டும். என்ன ஆதாரங்களை மையமாக வைத்துக்கொண்டு கூறுகிறார் என்று," என்கிறார் வேலாயுதம் கந்தசாமி.
"இத்தனை வருடங்கள் தெரியாத உண்மை பொன்னாருக்கு இப்போதுதான் தெரிகிறது என்றால், இது சரியான சந்தர்ப்பவாத அரசியல்," என்கிறார் சரோஜா பாலசுப்பிரமணியன்.
அருண்.தே எனும் எனும் நேயர் இவ்வாறு கூறுகிறார்,"கதிராமங்கலம், தூத்துக்குடியில் போராட்டம் நடக்கிறது. அதைப்பற்றிப் பேசுங்கள்."
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்