முடிவுக்கு வந்த `ஆரஞ்சு நிற பாஸ்போர்ட்` குழப்பம்: ஏற்றுக்கொள்ளப்பட்ட மக்கள் கோரிக்கை

பாஸ்போர்ட்

பட மூலாதாரம், Getty Images

பாஸ்போர்ட்டின் வண்ணத்தை மாற்றுவது உட்பட பாஸ்போர்ட் வழங்குவதற்கான விதிகளில் பல மாறுதல்களை செய்து இருந்தது இந்திய வெளியுறவு அமைச்சகம். அதில் முதன்மையானது பாஸ்போர்ட் வண்ணத்தை ஆரஞ்சு நிறத்தில் மாற்றுவது.

பஸ்போர்ட்டின் கடைசி பக்கத்தை அச்சிடாமல் இருப்பது மற்றும் பாஸ்போர்ட் வண்ணத்தை மாற்றுவது ஆகிய முடிவுகளை சில தினங்களுக்கு முன் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் எடுத்தது.

வெளியுறவுத் துறை மற்றும் மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தை சேர்ந்த மூன்று அதிகாரிகள் குழு அளித்த பரிந்துரையின் பெயரில் இந்த முடிவானது எடுக்கப்பட்டது.

பாஸ்போர்ட்

பட மூலாதாரம், Getty Images

ஆனால், இந்த முடிவை மறுபரிசீலனை செய்யக் கோரி பலர் மத்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு கோரிக்கை வைத்து இருந்தனர்.

இந்த சூழலில், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் நடந்த அமைச்சக கூட்டத்தில் மக்களிடமிருந்து வந்த கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டு, ஈ.சி.ஆர். தகுதி கொண்ட பாஸ்போர்ட்கள் ஆரஞ்சு நிறத்தில் மாற்றுவது மற்றும் பாஸ்போர்ட்டின் கடைசி பக்கத்தை அச்சிடாமல் இருப்பது ஆகிய இரண்டு முடிவுகள் கைவிடப்பட்டன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: