நாளிதழ்களில் இன்று: ''அரசியலில் நான் சீனியர், ரஜினி, கமல் ஜூனியர்கள்''- விஜயகாந்த்

முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று (திங்கட்கிழமை) வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

தினமலர்:

இந்திய தலைமை தேர்தல் கமிஷனராக உள்ள ஏ.கே ஜோதியின் பதவிக்காலம் நாளையுடன் முடிவுக்கு வருவதால், தேர்தல் கமிஷனராக உள்ள ஓம் பிரகாஷ் ராவத் தலைமை தேர்தல் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியும், அரசியலில் நான் சீனியர், ரஜினி, கமல் ஜூனியர்கள். அவர்கள் அரசியலில் இறங்கி பார்க்கட்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ள செய்தியும் தினமலரில் இடம்பெற்றுள்ளது.

தினத்தந்தி:

அம்மா இருசக்கர வாகன திட்டத்தில் பயன்பெற விரும்பும், வேலைக்கு செல்லும் பெண்கள் இன்று முதல் அதற்காக விண்ணப்பிக்கலாம் என சென்னை மாநகராட்சி கமிஷனர் அறிவித்து உள்ளார் என்ற செய்தியும், பெட்ரோல், டீசலை சரக்கு மற்றும் சேவை வரி மசோதா வரம்புக்குள் கொண்டு வர அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டு வருவதாக மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார் என்ற செய்தியும் தினத்தந்தி நாளிதழில் இடம்பெற்றுள்ளது.

தினமணி:

வறுமை காரணமாக குற்றச் செயல்களில் ஈடுபடுத்தப்படும் அகதிகளை காக்கும் வகையில், சட்டம் பயிலும் மாணவர்கள் உதவ முன்வர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டி.எஸ் சிவஞானம் கூறியுள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

தி இந்து தமிழ்:

மின் வாரிய ஊழியர்களின் ஊதிய உயர்வு, நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக சென்னையில் இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதில் சுமூக தீர்வு ஏற்படாவிட்டால் வேலைநிறுத்தத்தில் ஈடுபட மின் ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர் என தி இந்து தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.

டைம்ஸ் ஆப் இந்தியா:

அமெரிக்காவில் குடியரசுக் கட்சியினரும், ஜனநாயகக் கட்சியினரும் புதிய வரவு செலவுத் திட்டம் குறித்து உடன்பட முடியாததால் அமெரிக்க அரசுத் துறைகளின் சேவைகள் நிறுத்தப்பட்டபோதிலும், விசா விநியோகிப்பது உள்ளிட்ட சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பணிகள் வழக்க போல இயங்கும் என டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :