You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"தேவதாசி முறையை உருவாக்கியவர்களே அதை கேவலமாக நினைப்பது வேடிக்கை"
ஆண்டாள் குறித்து தான் தெரிவித்த கருத்துக்களுக்கு எதிர்ப்பு எழுந்ததால், கவிஞர் வைரமுத்து வருத்தம் தெரிவித்த பிறகும் விமர்சனங்கள் மற்றும் எதிர்வினைகள் தொடர்கின்றன.
'அவர் வருத்தம் தெரிவித்தது போதாது; மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்துவது சரியா?
இந்த சர்ச்சையை வைத்து அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி நடைபெறுகிறதா?' என்று பிபிசி தமிழின் #வாதம்விவாதம் பகுதியில் கேட்கப்பட்ட கேள்விக்கு நேயர்களின் கருத்துகளை தொகுத்து வழங்குகிறோம்.
முதலில் ஆண்டாள் யார் என்பதை நிறுவிய பின் மன்னிப்பு கேட்க சொல்லி கூற வேண்டும். தேவதாசிமுறையை உருவாக்கியவர்களே அதை கேவலமாக நினைத்து போராடுவது வேடிக்கைக்குறியது என்று கூறியுள்ளார் சான் ராபின் எனும் நேயர்.
"மன்னிப்பு கேட்ட பிறகும் ஆளாளுக்கு விமர்சனம் செய்வது நல்லதல்ல. எல்லா மதங்களும் சகிப்புத்தன்மையையும், மன்னிப்பையும்தான் வலியுறுத்துகின்றன," என்று பதிவிட்டுள்ளார் சரோஜா பாலசுப்பிரமணியன்.
சக்தி சரவணன் இவாறு கூறுகிறார், " தமிழை நல் இலக்கிய நயத்தோடு ஆண்டு பாடிய பாடல்களால் ஆண்டவனை ஆட்கொண்டவள் "ஆண்டாள்", குறித்த விளக்கம் இருமொழிப் பொருள் தரும் கவி நடையில் இல்லாமல் இருந்திருக்கலாம். இருப்பினும் வருத்தம் தெரிவித்த பின்பும், நேர்த்தியான இலக்கண, இலக்கிய, வரலாற்று விளக்கம் ஏதுமற்ற வெற்று வாய்மொழியில் ஆயுதம் ஏந்தி வன்முறையைக் கையாண்டு மக்களைச் சமயம் சார்ந்து பிரிவினை அடையும் விதமாக மறுமொழி பேசுவோரின் செயல், நல் அரசியல் நெறியோ? அன்பை வலியுறுத்தும் ஆன்மீக நெறியோ அல்ல."
"எந்த மததினராலும் கடவுளாக பெரியவர்களாக மதிக்கப்படும் நபர்களை விமர்சிக்க யாருக்கும் உரிமை இல்லை. பேச்சு சுதந்திரம் எழத்து சுதந்திரம் எல்லாத்திற்கும் எல்லை உண்டு," என்கிறார் காஜா மொஹிதீன் அலி.
"மதவெறியர்களுக்கு இலக்கியம் புரியாது," என்கிறார் ரத்னசிங்கம் ஸ்ரீகந்தராஜா.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்