ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

குவைத் வேலை வேண்டாம்: பிலிப்பைன்ஸ்

குவைத்தில் பிலிப்பைன்ஸ் பெண்கள் பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தப்படுவது குறித்து, மரணம் குறித்தும் வந்த செய்திகளையடுத்து, குவைத்திற்கு தங்கள் நாட்டு குடிமக்கள் வேலைக்குச் செல்வதை பிலிப்பைன்ஸ் தடுத்து நிறுத்தியுள்ளது.

குளிரில் 10 அகதிகள் பலி

லெபனான் எல்லையில் உள்ள மலையைக் கடக்க முயன்ற 10 சிரிய அகதிகள் கடும் குளிரின் காரணமாக பலியாகியுள்ளனர்.

உறவு முக்கியமானது

ஐரோப்பாவை வலிமையாக்க, பிரான்ஸ் உடனான் ஜெர்மனியின் உறவு முக்கியமானது என ஜெர்மன் சான்லிசர் ஏங்கலா மெர்கல் கூறியுள்ளார்.

போராளிகள் உடனான மோதல்

உகாண்டா இஸ்லாமிய போராளிகள் உடனான சண்டையில் குறைந்தது 11 பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டுள்ளதாகக் காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டில் இருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :