You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நடிகர்களின் அரசியலுக்கு மாற்று தினகரனின் தனிக்கட்சியா?
புதிய அரசியக் கட்சி தொடங்குவது குறித்து அறிவிக்கப் போவதாக டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
"அதிமுகவை கைப்பற்ற தினகரன் தொடர்ந்து முயற்சிக்க வேண்டுமா? புதுக்கட்சி துவங்குவதுதான் தினகரனுக்கு உள்ள ஒரே வழியா?," என்று பிபிசி தமிழின் #வாதம்விவாதம் பகுதியில் கேட்கப்பட்ட கேள்விக்கு நேயர்கள் பதிவிட்ட கருத்துகளின் தொகுப்பு.
"விரைவில் வரும் தேர்தல்களுக்காக மட்டும் கட்சி துவங்கின்றார், இந்த பாஜகவின் பினாமிகளின் ஆட்சி கவிழ்ந்தால் பழனிச்சாமி மற்றும் பன்னீரின் பக்கம் யாரும் தேர்தலில் நிற்கமாட்டார்கள் பலர் தினகரன் பக்கமே வருவார்கள," என்று கூறியுள்ளார் சிவ சர்மா எனும் நேயர்.
"தமிழகத்தின் இன்றைய சூழலில் இவர் தனிக்கட்சி தொடங்குவது என்பது தைரியமான முடிவே. பல சினிமா நட்சத்திர அரசியல் பிரவேசம் என்று சொல்வது உண்மையாக இருக்கும் பட்சத்தில் இவரின் தனிக்கட்சி என்பது தனித்துவமாக அமையும் மற்றும் வெறுக்கும் சினிமா அரசியலையும், புதிய அரசியல் மாற்றம் வேணடும் என எதிர்பார்பவர்களையும் ஆர்வபடுத்துவதாய் தினகரனின் அரசியல் தனி கட்சி பிரவேசம் அமையலாம்," என்கிறார் ரமேஷ் நாராயண்.
அபு ஜாசர் எனும் நேயர் இவ்வாறு கூறுகிறார், " தினகரனின் புதிய கட்சி என்பது எதிர் வரும் தேர்தல்களுக்காகவே அமையும். ஆர்.கே நகரில் தற்போதைய அதிமுக-வைவிட தினகரன் தன்னை மேலானவராக நிரூபித்திருக்கிறார். புதியகட்சி அதை நிரூபிக்கும்."
"அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பதற்கு இது சரியான சான்று. தமிழக மக்கள் அரசியலில் கேரள மாநிலத்தை பின்பற்றினால் தமிழினம் தழைக்கும்," என்பது முருகையன் எனும் நேயரின் கருத்து.
"அதிமுக என்றால் தினகரன்தான்," என்று கூறியுள்ளார் பொன்னையா எனும் நேயர்.
சுரேஷ் குமார் இவ்வாறு கூறுகிறார், "புதுக்கட்சி தொடங்குவதுதான் அவர் அரசியலில் நிலைக்க ஒரே வழி."
"நாடெங்கிலும் விடுதலை எழுச்சி எழாமலும், எழுந்தும் பரவாமல் இருந்த காலத்தில், மக்கள் சமூக நீதிக்கான எழுச்சியை கோட்பாடுகளாகக் கொண்டு கொள்கைகளை வகுத்து கட்சியைக் கட்டமைத்து மக்களுக்காகப் போராடி, முன்னேற்றத்திற்கான முதல் அடித்தளத்தை அமைத்து முன்னோடியாகத் திகழ்ந்தது தமிழகம். ஆனால் இன்று தனிப்பட்ட விருப்புவெறுப்பு, ஆளுமை, சுயவிளம்பரம், தன்நலம், பிறரது வற்புறுத்தல், குறிப்பிட்ட சமூகத்திற்கான நலன், திரைத்துறையின் நாயகத் துதி போன்றவற்றுக்கான கொள்கைகளற்ற கட்சிகளால் மக்கள் நலன் என்பது வெற்று விளம்பரத்திற்கு மட்டுமே என முன்னிலைப் படுத்தப்பட்டு தமிழக அரசியல் களம் களைச் செடிகளால் நிறைந்து காணப்படுகிறது,"என்று பதிவிட்டுள்ளார் சக்தி சரவணன்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்