நாளிதழ்களில் இன்று: இனி கடல் வழியாக ஹஜ் புனிய யாத்திரை செல்லலாம்

முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று (செவ்வாய்கிழமை) வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

தினமணி:

இணையவழி குற்றங்களுக்கு தீர்வு காண்பதற்கு காவல் துறையினர் அதிமுக்கியத்துவம் அளிக்க வேண்டும் என மாநில போலீஸ் உயரதிகாரிகள் மாநாட்டில் பிரதமர் மோதி அறிவுறுத்தியுள்ளதாகத் தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து ஹஜ் புனிய யாத்திரை மேற்கொள்பவர்களில் ஒரு பகுதியினரை கடல் வழியாக மெக்காவுக்கு அனுப்பும் இந்திய அரசின் திட்டத்திற்கு செளதி அரேபியா ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இதனால் யாத்திரை செல்லும் இஸ்லாமியர்களின் பயணச் செலவு பெருமளவு குறையும் எனவும் தினமணி செய்தி கூறுகிறது.

தினத்தந்தி:

தமிழக சட்டசபையின் முதல் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இதில் தனது உரையை வாசித்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பல்வேறு அம்சங்களைப் பட்டியலிட்டார். அதில், பெண்கள் இரு சக்கர வாகனம் வாங்க மானிய தொகை ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்படும், மீனவர் பிரச்சனை தீர கச்சத்தீவை பெறுவதே ஒரே தீர்வு போன்றவற்றை அவர் பேசினார் என தினந்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் குடும்பத்துடன் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகப் போராட்டத்தில் ஈடுபடும் தொழிற்சங்கங்கள் அறிவித்து உள்ளன என்ற செய்தியையும் தினந்தந்தி வெளியிட்டுள்ளது.

தினமலர்:

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே உள்ள டி.டி.வி தினகரனின் பண்ணை வீட்டில் இரண்டாவது நாளாகச் சோதனை நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகள், ஆவணங்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதா என பள்ளம் தோண்டிப் பார்த்தனர் என தினமலர் செய்து வெளிட்டுள்ளது.

தி இந்து(தமிழ்)

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள வலு இழந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அடுத்த 3 முதல் 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் பதிவு செய்துள்ளார் என தி இந்து(தமிழ்) செய்தி வெளியிட்டுள்ளது.

டைம்ஸ் ஆஃப் இந்தியா:

சர்ச்சையில் சிக்கிய 'பத்மாவத்' என பெயர் மாற்றப்பட்ட பத்மாவதி திரைப்படம் ஜனவரி 25-ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் ராஜஸ்தான் மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் விதமாக இத்திரைப்படம் ராஜஸ்தானில் திரையிடப்படாது என அம்மாநில முதல்வர் வசுந்தரா ராஜே தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

சமூகஊடகங்களில் பிபிசி தமிழ் :