You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நாளிதழ்களில் இன்று: நிறைவேறுமா முத்தலாக் தடை மசோதா?
முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று (வெள்ளி) வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.
தினமணி
தமிழக அரசுடன் நடத்தப்பட்ட ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை தோல்வியுற்றதையடுத்து, அரசுப் போக்குவரத்து பணியாளர்கள் வேலை நிறுத்தம் செய்தது, தினமணியில் முதல்பக்க செய்தியாக இடம்பிடித்துள்ளது. பேச்சுவார்த்தை 8 மணி நேரம் வரை நீடித்த நிலையிலும், அரசுக்கும் பணியாளர்களுக்கும் இடையில் சுமூக முடிவு எட்டப்படாததால், பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. நேற்றைய திடீர் வேலை நிறுத்தத்தால், மாலையில் பணி முடிந்து வீடுதிரும்பிய பலரும் அவதிக்குள்ளாகியதாக அந்த செய்தி கூறுகிறது.
தினத்தந்தி
மறைந்த தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் போயஸ்தோட்ட இல்லமான வேதா இல்லத்தில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்திய செய்தி முதல் பக்க செய்தியாக தினத்தந்தியில் வெளியாகியுள்ளது. அவரின் இல்லம் நினைவில்லமாக மாற்றப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், அதற்கான ஆயத்தப்பணிகள் தொடங்கியுள்ளன என்று அதில் குறிப்பிட்டுள்ளது. மேலும், அந்த வீட்டில் சீல் வைக்கப்பட்டிருந்த இரண்டு அறைகள், அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தி இந்து (தமிழ்)
மாநிலங்களவையின் கடைசி நாளான இன்று, முத்தலாக் தடை மசோதா நிறைவெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது என்ற செய்தி தி இந்துவில் பிரதான செய்தியாக வெளியாகியுள்ளது.
முத்தலாக் தடை மசோதாவை தேர்வுக்குழுவின் பரிசீலனைக்காக அனுப்ப வலியுறுத்தி எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், நேற்றைய மாநிலங்களவை ஒத்தி வைக்கப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த வாரம், அதிக எதிர்ப்புகளுக்கிடையே, இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது என்றும், இந்த செய்தி தெரிவிக்கிறது.
தி இந்து (ஆங்கிலம்)
பாகிஸ்தான் வெளியிட்ட குல்புஷன் ஜாதவ் பேசிய காணொளி என்பது வெறும் பிரச்சாரமே என்று இந்தியா பதிலளித்துள்ளது என்ற செய்தியை தலையங்கமாக தி இந்து பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இந்த காணொளியில், தன்னை பார்க்க வந்த தாயார் மற்றும் மனைவி ஆகியோரை, இந்திய அதிகாரிகள் அச்சுறுத்தியதாகவும், அவர்களை திட்டுவதை தானே பார்த்ததாகவும் ஜாதவ் தெரிவித்துள்ளார் என்று இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :