You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
''கீழ்தரமான, பிரித்தாளும் அரசியலை அனுமதிக்கமாட்டோம்'': பிரகாஷ் ராஜ் சாடல்
திரைப்பட நடிகர் பிரகாஷ் ராஜ் வகுப்பாத அரசியலை முன்னெடுக்கும் அரசியல்வாதிகளை சாடி சமூக ஊடகமான ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய நாட்டில் தகுதியானவர்கள் யார் வேண்டுமானாலும் எங்குவேண்டுமானாலும் தலைவராகலாம் என்ற தன்னுடைய கருத்தில் உறுதியாக இருப்பதாகவும், பெங்களூரு பத்திரிகையாளர் மன்றத்தில் தான் பேசிய விஷயங்கள் வகுப்புவாத அரசியலை செய்பவர்களுக்கு எதிரானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இனிவரக்கூடிய தேர்தல்களில், கர்நாடகா தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் உள்ள தன்னை போன்ற வாக்காளர்கள் வகுப்புவாத அரசியல்வாதிகளின் கேவலமான, வகுப்புவாத, பிரித்தாளும் அரசியலை ஏற்கமாட்டார்கள் என்றும், தன்னுடைய கருத்தை திரித்து தனக்கு எதிராக வெறுப்புணர்ச்சியை பரப்பப்படுவதாகவும் நடிகர் பிரகாஷ் ராஜ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பிறமொழி பேசும் மாநிலங்களில் பயம் மற்றும் நம்பிக்கையின்மையை வகுப்புவாத அரசியல்வாதிகள் நிரூபித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் ( திங்கட்கிழமை), பெங்களூரு பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்ற சந்திப்பு ஒன்றில், நடிகர் பிரகாஷ்ராஜ் கர்நாடகாவை கன்னடர்களே ஆள வேண்டும் என்று கருத்து தெரிவித்ததாக கூறி ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இது சமூக ஊடகங்கள் பெரும் விவாதத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.
#justasking
சமூக ஊடங்களில் தீவிரமாக செயல்பட்டுவரும் நடிகர் பிரகாஷ் ராஜ், ட்விட்டரில் #justasking என்ற ஹேஷ்டேக்கில் மத்திய அரசையும், தீவிர வலதுசாரி அமைப்புகளையும் சாடி கருத்துகளை வெளியிட்டு வருகிறார்.
ஏற்கனவே, ''தாஜ் மஹாலின் அடித்தளம் அருகில் நீங்கள் தோண்ட ஆரம்பித்துவிட்டீர்கள். எப்போது அதை இடிக்க திட்டமிட்டுள்ளீர்கள்'' என்றும், ''குறைந்தபட்சம் எங்கள் குழந்தைகளை இறுதியாக தாஜ் மஹாலை காண அழைத்து செல்வோமோ'' என்றும் மத்தியில் ஆளும் பாஜகவை எதிர்த்து கருத்து தெரிவித்திருந்தார்.
பிற செய்திகள்:
சமூகஊடகங்களில் பிபிசி தமிழ் :