You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
முத்தலாக்: மத்திய அரசின் அவசரம் வாக்கு வங்கி அரசியலா?
முத்தலாக் விவாகரத்து நடைமுறையை சட்டவிரோதமாக்கும் மசோதா இந்திய மக்களவையில் நிறைவேறியது. இதில் பா.ஜ.க அரசு அதிக ஆர்வம் காட்டுவது உள்நோக்கம் கொண்டது என்ற விமர்சனம் சரியா? அரசின் நடவடிக்கை, முஸ்லிம் பெண்களின் வாழ்க்கை காப்பாற்றுமா என நேற்றைய வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.
அதற்கு பிபிசி தமிழின் பேஸ்புக் மற்றும் டிவிட்டர் பக்கங்களில் வாசகர்கள் தெரிவித்த கருத்துக்களை தொகுத்துத் தருகிறோம்.
"ஒவ்வொரு மாற்றமும் அந்தந்த சமூகங்களிடம் இருந்து பிறப்பதே சிறப்பு! முத்தலாக் முறையை இஸ்லாமியர்களே மறு பரிசீலனை செய்திருக்க வேண்டும் அவர்களின் தாமதத்தினால் பாஜக அதனை கையில் எடுத்துக்கொண்டுவிட்டது!" என்கிறார் வேலு எனும் நேயர்.
"நீங்கள் போட்ட இந்த தடை சட்டத்தால் ஒருவன் மூன்று வருடம் சிறையில் இருந்தால் அவனைப் பெற்றவர்களுக்கும் அவன் பெற்ற பிள்ளைகளுக்கும் திருமணம் செய்த மனைவிக்கும் யார் சோறு போடுவது நடுரோட்டில் அந்த குடும்பம் பிச்சை தான் எடுத்த வேண்டும். இஸ்லாத்தில் ஆணுக்கு நிகராக பெண்ணுக்கும் சம பங்கு உண்டு," என ஃபேஸ்புக்கில் எழுதியுள்ளார் எம்.டி.என் அல்க்ராஜா
அ.ப. மோகன் இவரு கூறுகிறார்," ஆண் ஆதிக்க செயல் முத்தலாக். அதேபோல ஒரு பெண் பல ஆண்களை திருமணம் செய்ய அனுமதிப்பார்களா? "
"ஒரே தடவை மூன்று முறை தலாக் சொன்னால் அது இஸ்லாத்தில் ஒரு தலாக்தான். கணவனையும் மனைவியையும் அது அடுத்த 3 மாதம் வரை பிரிக்காது.ஒரே வீட்டில் ஒன்றாகத்தான் இருவரையும் கட்டாயமாய் வாழ வைக்கும். அதுவும், கணவனின் பொருளாதார பராமரிப்பு உதவியில்," என்கிறார் அப்பாஸ்.
"முதலில் இந்தியாவில் ஒவ்வொறு மதத்திற்கும் ஒவ்வொரு சட்டம் என்பது சரி இல்லை.இந்த சட்டத்தால் பல நன்மைகள் உள்ளன.இதை முன்பாகவே செய்து இருக்க வேண்டும்.நல்ல முடிவு," என எழுதியுள்ளார் நாகராஜ்.
சுல்தான் பாஷா, " கணவனை சிறைக்கு அனுப்பிய பெண்ணுக்கு மறுமண வாய்ப்பையும் சிக்கலாக்குகிறது இச்சட்டம்.மூன்று வருட சிறைத் தண்டனை என்பது முஸ்லிம் ஆண்களை குறி வைத்து ஒடுக்கும் பாசிச அரசின் ஒடுக்குமுறை," என்று கூறுகிறார்.
"பெண்கள் வாழ்வில் பாதுகாப்பை உறுதிப்படுத்தினால் ஏற்றுக்கொள்ளதான் வேண்டும்,"எனக் கூறியுள்ளார் கரிசல் ராஜ்
"இதில் எந்த மாற்று சிந்தனையும் அர்த்தமற்றது பெண்களுக்கு அளித்த அநீயை தட்டிகேட்கிறது அரசு. அது தவறா ? அதற்கு தகுந்த தீர்வை கொண்டுவந்துள்ளது வரவேற்கதக்கது," என கூறியுள்ளார் தர்மராஜ் செல்லா என்ற வாசகர்.
"அரசியல் ஆதாயம் உள்ளது என்றாலும் இஸ்லாமிய பெண்களின் உரிமையை அரசு இந்த சட்டத்தின் மூலம் மீட்டு கொடுத்துள்ளது," என எழுதியுள்ளார் சரோஜ் பால சுப்ரமணியன்.
" உள்நோக்கம் கொண்டது என்ற விமர்சனம் சரியே!!," எனக் கூறியுள்ளார் ஷாகுல்.
"இந்து மதத்தில் மனித ஏற்றதாழ்வுகள், சாதிய வன்கொடுமைகள், சாதிய கொலைகள் மிக அதிகம். அதைத் தடுப்பதற்கு மத்திய அரசு எவ்வித முயற்சியும் செய்யமால் இஸ்லாம் மதத்தில் உள்ள பிரச்சனைகளை அதன் மதத்தலைவர்களை கலந்து அலோசிக்கமால் மத வெறுப்பின் காரணமாக மேற்கொள்ளும் நடவடிக்கை தான் இந்த முத்தலாக்," என எழுதியிருக்கிறார் இரா.வீரவேந்தன்.
பிற செய்திகள்
சமூகஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்