ஷாருக், அமிதாப், ஏ.ஆர்.ரகுமான் வருகையால் களைகட்டிய 'விருஷ்கா' வரவேற்பு (புகைப்படத் தொகுப்பு)

இத்தாலியில் திருமணம், பனிபொழியும் மலையில் தேன் நிலவு, புதுடெல்லியில் திருமண வரவேற்பு நிகழ்வு என்று விராட் கோலி - அனுஷ்கா திருமண கொண்டாட்டங்கள் நேற்றோடு மும்பையில் முடிவுக்கு வந்துள்ளன.

நேற்று மும்பையில் நடைபெற்ற விராட் கோலி - அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்வின் இனிமையாக தருணங்களை புகைப்படத் தொகுப்பாக வழங்குகிறோம்.

மும்பையில் நடைபெற்ற விருஷ்கா வரவேற்பு நிகழ்வின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வந்தது. ட்விட்டரில் #Viruska's_reception என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டானது.

விராட் கோலி - அனுஷ்கா வரவேற்பு நிகழ்வில் குடும்பத்தாருடன் கலந்துகொண்ட அமிதாப் பச்சன் ட்விட்டரில் சில புகைப்படங்களை பதிவேற்றியிருந்தார்.

கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி, மனைவி சாக்‌ஷி மற்றும் மகள் ஜிவாயுடன் வரவேற்பு நிகழ்விற்கு வந்திருந்தார்.

பாலிவுட்டில் அனுஷ்காவுடன் நடித்த ரன்பீர் கபூரும் வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்.

அனுஷ்கா ஷர்மா பாலிவுட்டில் பிரம்மாண்ட வரவேற்பை பெற்றதற்கு ஷாருக் கான் ஒரு முக்கிய காரணம். அவர்கள் இருவரும் ஜோடியாக நடித்த ரப் நே பானாதி ஜோடி என்ற திரைப்படம் பாலிவுட்டில் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. விருஷ்கா திருமண வரவேற்புக்கு பாலிவுட்டின் கிங் கானும் வந்திருந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :