You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அதிகாரிகளை சந்தித்த ஆளுநர்: மாநில சுயாட்சிக்கு ஆபத்தா?
கோவை மாவட்டத்தில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவுக்கு சென்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அங்கு மாவட்ட அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டத்தை நடத்தியது மாநில சுயாட்சி குறித்த பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஏற்கனவே மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மாநில அரசு உள்ளதாக எதிர் கட்சிகள் விமர்சிக்கும் நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
''ஆளுநர் ஆய்வுக் கூட்டத்தை நடத்தியது அவரது அதிகாரத்துக்கு உட்பட்டதா? மாநில அரசின் உரிமையில் தலையிடும் செயலா?" என்று பிபிசி தமிழ் நேயர்களிடம் சமூக வலைத்தளம் வாயிலாகக் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர்கள் பதிவிட்ட கருத்துகளின் தேர்ந்துடுக்கப்பட்டவற்றை தொகுத்து வழங்குகிறோம்.
"இது மத்திய அரசின் தூண்டுதலின் பேரில் நடைபெற்ற ஒன்று. தமிழகத்தில் தன்னால் எதையும் செய்ய முடியும் என்று நிரூபித்து உள்ளது. பினாமி ஆட்சியில் இது சாதாரண விஷயம் தான்." என்று கருத்து தெரிவித்துள்ளார் அபுல் கலாம் ஆஸாத்.
கருத்தய்யா கஜேந்திரனின் கருத்து இது: "அவருக்கு இப்ப எந்த அதிகாரமும் கிடையாது.மந்திரிசபையின் சட்ட முறை அரசியல் சாதனத்திற்கு மாறாக இருப்பின் மறு ஆலோசனைக்கு திருப்புதல் தான் அவர் வேலை. Execution அதிகாரம் இப்ப இல்லை.அதிகாரிகளை கூட்டி கூட்டம் நடத்த முயல்வது இரு அதிகார மையங்களை உருவாக்கும். சரியல்ல."
"மாநில உரிமையில் தலையிடும் செயல். என்ன செய்வது மானமற்றவர்கள் ஆட்சியில் இருக்கின்றார்களே!" என்கிறார் லோகநாதன் பழனி
"நடுவண் அரசிற்கு இணக்கமாக இயங்காத மாநில அரசின் மீது, ஆளுநர் மூலம் நெருக்கடி, அச்சுறுத்தல் போன்ற மறைமுக அரசியல் நடவடிக்கைகளில் ஆளும் நடுவண் அரசு நிகழ்த்துவதென்பது இந்திய அரசியல் வரலாறு நெடுக்கிலும் இருப்பதைக் காணலாம். தற்பொழுது ஆட்சியில் இருக்கும் நடுவண் அரசு ஒருபடி மேலே சென்று (அவர்களின் ஆட்சி இல்லாத) அனைத்து மாநிலங்களிலும் தங்களுக்குச் சாதகமான ஆளுநரை நியமித்து கடமைகளுக்கு மீறிய செயலில் ஈடுபட வைத்து மக்களிடையே மாநில அரசு செயல்பாட்டின் மீதான நம்பகத்தன்மையைக் குறைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம் மெல்ல மெல்ல மாநில அரசின் உரிமைகளைப் பறித்து ஒற்றை ஆட்சிமுறையை அமல்படுத்த முயல்கின்றனர்." என்று கருத்து தெரிவித்திருக்கிறார் சக்தி சரவணன்.
"அதிகாரம் கிடையாது,உள்ளது என்றால் மத்திய அரசு நிர்வாகத்தில் தலையிட ஜனாதிபதிக்கு அதிகாரம் இருக்கும்" என்கிறார் வெங்கடாஜலபதி.
பச்சையப்பன் ஞானசுந்தரத்தின் கருத்து, " மாநில உரிமை பற்றி பேசும் நாம் அறிவார்ந்த அமைச்சர்களது செயல் பாட்டையும் ஒப்பிடும் போது இது தேவை என தோன்றும் ."
"கவர்னர் பணிக்கு ஆதரவு தெரிவியுங்கள். இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு ஒ௫ வாய்ப்பு." என்கிறார் ஸ்ரீராம் ராம்.
தமிழ்மணி பிச்சை, "ஆளுநர் தலையிடுவது தவறில்லை இவங்க ஒழுங்கா இருந்தா கவர்னர் ஏன் மாநில பிரச்சனையில் தலையிடப் போகிறார்." என்கிறார்.
"நிர்வாகம் சரியில்லை என்பதையும் தலையிடு செய்தாலும் தட்டிக்கேட்பாரில்லை என்பதையும் நிரூபிக்கிறது...!" என்கிறார் ரமேஷ் நாராயண்.
" BJP ஆளும் மாநிலங்களில் இது போல் தலையீடு இல்லையே ஏன் .....?" என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் முகமது ஹமு.
கலையரசன் சொல்கிறார்,"சட்டத்திற்கு புறம்பான செயல் ஆளுநரின் செயல் மிகவும் கண்டிக்கதக்கது"
" தமிழ் நாட்டில் தற்போது இத்தகைய ஒப்பரேஷன் தேவையாக இருக்கிறது." என்பது சரோஜா பாலசுப்ரமணியனின் கருத்து.
இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள தீரன் ஜெயசூர்யா, "மாநில அரசின் உரிமையில் தலையிடும் செயல்" என்கிறார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்