குஜராத் தேர்தல்: "இது தேர்தலல்ல. மகத்தான கதைக்கான முன்பரிசோதனை"

    • எழுதியவர், ஷிவ் விஸ்வநாதன்,
    • பதவி, பேராசிரியர், ஜிண்டால் குளோபல் சட்டப்பள்ளி.

தேர்தல்களில் மிகவும் தேர்ந்தவரான எனது நண்பர் ஒருவரிடம், வரவிருக்கும் தேர்தல் குறித்து கேட்டபோது, அவர் சிரிக்கதான் செய்தார்.

"இது தேர்தலல்ல. 2019ஆம் ஆண்டு வரவிருக்கும், மகத்தான கதைக்கான முன்பரிசோதனையே. தங்களுக்கு உள்ள சந்தேகங்கள் மற்றும் குறைபாடுகள் குறித்து கற்பதற்காக அமித் ஷா நட்டுள்ள ஒரு முன்மாதிரி செடி குறித்த ஆய்வாக தான் இது உள்ளது." என்றார்.

என் நண்பர், தேர்தல் என்பது, சந்தேகம், போட்டி, நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றுக்கு இடையேயான போட்டி என்கிறார்.

இன்றைய தேர்தல்கள் இவற்றை சற்றே வெளிப்படுத்துக்கின்றன. தற்போது என்ன நடக்கிறது என்பது கிட்டத்தட்ட விதிவசமான ஒரு செயலே.

மகத்தான கதையை ஏற்கனவே பாஜக பிடித்துவிட்டது. தற்போது நாம் பார்க்கும் சிறிய போராட்டங்கள் கூட, ஜனநாயகத்திற்கு உயிர்துடிப்புள்ளது போல காண்பிக்கும், முன்பே இயற்றப்பட்ட ஒரு கேளிக்கையே.

அனைத்து கவனமும் 2019 தேர்தல் மீது தான். தற்போது நடக்கும் போராட்டங்கள் எல்லாமே இடைக்காட்சிகளே.

சொல்லப்போனால், அவர் பயன்படுத்திய வார்த்தை, பேச்சு வழக்கிற்கான ஒன்று. இது ஒரு "பொழுது போக்கு" தேர்தல்.

மோதியின் திறமையை நாடு முழுவதும் பார்க்கும் போது, இத்தகைய கற்பனையை அவர் பெற்றுள்ளார்.

அவரின் வாதாடும் திறனில் விஷயங்களே இல்லை என்றாலும், அவர் சுறுசுறுப்பானவராகவும், நோக்கத்தின் மீது மிகவும் பொறுப்புணர்வு கொண்டவராகவும் தன்னை உருவகம் செய்கிறார்.

எதிர்கட்சிகள் வேலையற்றவர்களாக இருக்கும் நிலையில், தன்னை ஒரு கடுமையான உழைப்பாளியாக காண்பித்துக் கொள்கிறார்.

மதகுருக்கள் எத்தனை பேர் மோதியின் நல்ல குணம் குறித்து சான்றிதழ் அளித்துள்ளனர் என்பதை என் நண்பர் சுட்டிக்காட்டினார்.

முராரி பாபு, ஸ்வாமிநாராயணன் தலைவர்கள், ஜக்கி வாசுதேவ் ஆகியோர் மோதிக்கு சான்றிதழ் அளிக்க, ராகுலுக்கு சான்றிதழ் அளிப்பவரோ அவரின் தற்காப்புக்கலை குரு மட்டுமே.

இதில் உள்ள எதிர்மறையான விஷயத்தை மக்கள் கவனிக்காமல் இருக்கமாட்டார்கள். அக்கிடோ தேர்தலுக்கான ஒரு விளையாட்டு இல்லை.

மோதியையும் தாண்டி, மக்கள் ஆர்.எஸ்.எஸ் மற்றும் அமித் ஷா உள்ளதை உணர்கிறார்கள்.

எதிர்கட்சிகள் மெதுவாக நகரும் நிலையில், பாஜக தேர்தலுக்காக துரிதமாக தயார் செய்து, எண்ணெய் ஊற்றி வைக்கப்பட்டுள்ள கருவியாக உள்ளது.

அதை மாற்றியமைக்க ராஜஸ்தானின் சச்சின் பைலட், மேற்கு வங்கத்தின் மம்தா ஆகியோர் சில முயற்சிகளை செய்தாலும், அவை, அதன் எதிர்க்கட்சியின் `பாகங்களுக்கு இணையான அளவிற்கு கூட அவை இல்லை.` அவற்றின் கூட்டு முயற்சி, அந்த அளவிற்கு வரவில்லை. அவற்றில், ஒரு அமைப்போ, அடையாளமோ, கதாப்பாத்திரமோ இல்லை.

ஒருவகையில், நியாயமான அதிர்ஷ்டம் பாஜக பக்கம் உள்ளது. மிகவும் கடுமையாக முயலும் கட்சியாகவே மக்கள் அதை உணர்கின்றனர்.

பண மதிப்பிழப்பு என்பது, ஒருவகையில் தவறாக முடிந்த ஒழுங்குபடுத்தும் விளையாட்டாகவே பார்க்கப்படுகிறது. சிலர் மட்டுமே மோதி மீது குற்றம் சாட்டுகின்றனர். போருக்கான ஆடைகளை அணிந்த ஒரு மிளிரும் வீரராகவே அவர் இன்னும் மக்களிடம் உள்ளார்.

உளவியலாளர்கள் கூறுவது போலவே, மக்கள் எதோ இரண்டு ஆண்டுகள் கடந்து செல்வதற்கு காத்திருப்பது போலவே உள்ளது.

ஆனால், குற்றங்களே இல்லாத கட்சியாக பாஜக இருக்கவில்லை.

வேலையின்மைக்கான அதன் கொள்கைகள், விவசாயம் குறித்த அவர்களின் யோசனைகள் ஆகியவை பேரழிவுகள்.

இருந்தபோதும், இவை இன்னும், போதுமான அளவிலான மக்களை வீதியில் போராட கொண்டுவரவில்லை.

இந்த ஒருங்கிணைந்த மெளனம் ஆபத்தானது.

தேர்தலுக்கான பரபரப்பான சூழலையே காண இயலவில்லை.அரசியலில் உள்ள வெற்றிடத்தில் பெரும்பான்மை கட்சி தன் ஊடக பலத்தோடு வலிமையில்லாத எதிர்கட்சியோடு போட்டியிடுவதால் எதையும் சாதித்துவிடும் சூழலே நிலவுகிறது

வெறுமையை கொண்டுள்ள எதிர்கட்சியை எதிரே வைத்துக்கொண்டு, ஊடகங்களுடன் உள்கூட்டுக் கொண்டு, பெரும்பான்மை கொண்ட ஒரு பெரிய இயந்திரம் எதில் இருந்தும் தப்பிக்கலாம் என்ற அரசியல் வெறுமை தான் இப்போது நிலவுகிறது.

பாஜக வெற்றியடைந்த கட்சியல்ல. இங்கு, மாற்று இல்லை. வலுவான எதிர்ப்பு இல்லை. அரசியல் மிகவும் சோர்ந்துள்ளது.

தேர்தல்கள் தற்போது ஒரு அமைதியான படம் போல உள்ளன. மிகவும் சத்தமான போட்டிகளுக்கு மாறாக, அமித் ஷா மற்றும் மோதியின் பெரிய கட்-அவுட்களை அவை பெற்றுள்ளன.

குஜராத்தை எடுத்துக்கொண்டால், மூன்று வழிகளில் கவனம் ஈர்க்கப்படுகிறது. ஹர்திக் பட்டேல், அல்பேஷ் தாக்கூர் மற்றும் ஜிக்னேஷ் மேவானி ஆகியோர் ஆக்கிரோஷமாகவும், சத்தமாகவும் இருந்தாலும், தேரோட்டம் போல அமித் ஷா உருவாக்கிவரும் ஒன்றிற்கு முன்பு, அவை மிகவும் சிறிய படம் போல தெரிகின்றன.

பட்நாயக், லல்லு யாதவ், மம்தா மற்றும் கம்யூனிஸ்ட் இணைந்து ஒரு எதிர்கட்சியை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம், முயற்சி மற்றும் தொலைநோக்கு பார்வை இல்லாமையே இந்த வெற்றிடத்திற்கு காரணம்.

யாரும் உடனடியான முடிவுகளை கேட்கவில்லை. யுக்திக்கான நீண்டகால திட்டத்தையே கேட்கிறார்கள்.

அவரவர்களின் தனிப்பட்ட திறன், தேசிய அளவிலான யுக்திக்கு ஈடாக இல்லை.

இரண்டாம் தர திரைப்படங்களில் உள்ள எதிர்பார்ப்புகளின் அளவிற்கு கூட இன்றைய அரசியல் இல்லை.

இதன் விளைவாக, தவறுகளை அளவிடும் திறன், விவாதத்திற்கான யோசனை ஆகியற்றை இன்றைய ஜனநாயகம் இழக்கிறது.

சொல்லப்போனால், நீதிக்கான போராட்டங்களை நடத்திய சென்னையில் கூட இன்று அரசியல் வெற்றிடம் நிலவுகிறது.

பாதி முடிக்கப்பட்ட திரைக்கதையுடன் கதாநாயகன் போல கமலஹாசன் நிற்க, மவுனமாகவே உள்ளார் ரஜினிகாந்த்.

அரசியலுக்கு வந்துள்ள ஆட்டிசம் நோய் தான் கவலையளிக்கிறது.

ஏற்கனவே, ஊடகங்கள், 2019 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவின் சூழலை கொண்டாடத் தொடங்கிவிட்டன.

இந்த சமூகம், விழித்தெழுந்து, விவாத்ததிற்கான எண்ணங்களையும் உணர்வுகளை உருவாக்கிகொள்வதன் மூலம், இந்தியாவின் ஜனநாயகம், 2019ஆம் ஆண்டில், தூக்கத்தில் நடக்காது என்று நம்பிக்கை கொள்வோம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :