You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'திருமணம் முடிந்த அன்றே குழந்தை எங்கே என்று கேட்டால் எப்படி?': எச். ராஜா கிண்டல்
சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோருக்கு தொடர்புடையவர்களின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தி கொண்டிருக்கும் நிலையில், பா.ஜ.கவின் தேசிய செயலாளர் எச்.ராஜா ஒரு ட்வீட் மூலம் டிடிவி தினகரனை கிண்டல் செய்துள்ளார்.
ஜெயா தொலைக்காட்சி அலுவலகம், நமது எம்.ஜி.ஆர். அலுவலகம் உட்பட சசிகலா குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட 180க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்த ஆரம்பித்தனர்.
இரண்டாவது நாளாக இன்றும் (வெள்ளிக்கிழமை) பல இடங்களில் இன்னும் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், டிடிவி தினகரனின் ஆதரவாளர் என கருதப்படும் கடலூரில் உள்ள ஜோதிடர் ஒருவரின் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தியுள்ளது.
இதுகுறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியான நிலையில், பா.ஜ.கவின் தேசிய செயலாளர் எச். ராஜா சமூக ஊடகமான ட்விட்டரில், தன் வீட்டில் ரெய்டு நடக்கும் என்று தெரியாத ஜோதிடரிடம் ஆலோசனை கேட்பது எவ்வளவு ஆபத்தானது என்று இப்போதாவது தினகரனுக்கு புரிந்திருக்கும் என்று பதிவிட்டுள்ளார்.
வருமான வரித்துறை சோதனையின் விளைவுதான் என்ன? என்று சுமந்த் ராமனின் கேள்விக்கு, திருமணம் முடிந்த அன்றே குழந்தை எங்கே என்று கேட்டால் எப்படி என்று எச். ராஜாபதிலளித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்