You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வைன்ஸ்டீனை அடுத்து ஸ்டீவன் சீகல் மீது நடிகைகள் பாலியல் புகார்
பிரபல ஹாலிவுட் நடிகரும் தயாரிப்பாளருமான ஸ்டீவன் சீகல் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக நடிகை போர்ஷியா டி ரோஸ்ஸி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுபற்றி கடந்த புதன்கிழமையன்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் போர்ஷியா. தி அரெஸ்ட்டேட் டெவலப்மன்ட் என்னும் அமெரிக்க தொலைக்காட்சி தொடரில் நடித்துள்ள போர்ஷியா, அமெரிக்காவின் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளரான எல்லென் டிஜெனெரெஸின் மனைவியாவார்.
ஒரு திரைப்படத்திற்காக ஸ்டீவன் சீகல் நடத்திய தேர்வின்போது, "திரைக்கு பின்பும் நல்ல புரிதலை கொண்டிருப்பது எவ்வளவு அவசியமானது என்பது தெரியுமா" என்று கூறி தனது கால்சட்டையை கழற்றியதாக சீகல் மீது போர்ஷியா குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து சீகல் கருத்தேதும் தெரிவிக்க விரும்பவில்லை என்று அவரின் மேலாளர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
65 வயதாகும் ஸ்டீவன் சீகல், 1980 மற்றும் 1990களில் அதிரடி கதாபாத்திரங்களில் நடித்ததற்காக பெயர்போனவர். அண்டர் சீஜ் மற்றும் ஃபிளைட் ஆஃப் ஃபியூரி ஆகிய திரைப்படங்களில் நடித்தவர். இவருக்கு ரஷ்ய அதிபர் புதின் அந்நாட்டுக்கான குடியுரிமையை கடந்த 2016ம் ஆண்டு அளித்தார்.
போர்ஷியாவை போன்று வேறு சில பெண்களும் சீகல் மீது பொறுப்பற்ற நடத்தை மற்றும் பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளனர். அதில், நடிகை ஜூலியானா மர்குலீஸ், மாடல் அழகி ஜென்னி மெக்கார்த்தி ஆகியோரும் அடங்குவார்கள்.
சமீபத்தில் ஹாலிவுட் தயாரிப்பாளரான ஹார்வி வைன்ஸ்டீன் மீது ஹாலிவுட்டை சேர்ந்த பல நடிகைகள் மற்றும் பெண்கள் பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகளை பதிவு செய்த நிலையில், தற்போது சீகல் மீது குற்றச்சாட்டுகள் குவியத் தொடங்கியுள்ளன.
ஹார்வி வைன்ஸ்டீன் தனக்கு எதிரான அனைத்து இணக்கமற்ற பாலியல் குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்